taiwan: china: pelosi: நான்சி பெலூசி வருகை! 24 மணிநேரத்தில் தைவானுக்கு 'செக்' வைத்த சீனா

By Pothy Raj  |  First Published Aug 3, 2022, 12:02 PM IST

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலூசி சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு சென்றார். இதையடுத்து, 24 மணிநேரத்துக்குள் தைவானுக்கு செக் வைத்தது சீன அரசு


அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலூசி சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு சென்றார். இதையடுத்து, 24 மணிநேரத்துக்குள் தைவானுக்கு செக் வைத்தது சீன அரசு

தைவானிலிருந்து பழங்கள் இறக்குமதிக்கும், மீன் இறக்குமதிக்கும் தடை விதித்த சீன அரசு, சீனாவிலிருந்து மணல் ஏற்றுமதி செய்யவும் தடை விதித்து தைவானுக்கு செக் வைத்துள்ளது சீனா.

Latest Videos

undefined

இந்த பூச்சாண்டிதனத்துக்கெல்லாம் நாங்க பயப்படமாட்டோம்’: சீனாவுக்கு தைவான் அதிபர் பதிலடி

தென் சீனக் கடலில் இருக்கும் தீவான தைவானுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சீனாவலிருந்து பிரிந்து சென்ற தைவான் சுதந்திரம் குறித்து எந்த நாடு பேசினாலும், வெளிநாட்டு தலைவர்கள் சென்றாலும் சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் அமெரி்க்க பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலூசி ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர், மலேசியா சென்ற நான்சி பெலூசி அங்கு பயணத்தை முடித்துக்கொண்டு தைனாவுக்கு சென்றார். 

தில்லாக தைவான் வந்திறங்கிய நான்சி பெலோசி அதிரடி அறிக்கை; மிரட்டும் சீனா!!

தைவான் சென்ற நான்சி பெலூசிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து உயர்ந்த பதவியில் இருப்போர் ஒருவர் வந்ததது இதுதான் முதல்முறையாகும். 
தைவானுக்கு நான்சி பெலூசி செல்வதற்கு முன் சீனா கடுமையாக எதிர்த்தது. ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி, தைவான் சிவப்புக் கம்பளம் விரித்து நான்சி பெலூசியை வரவேற்றது. 

இதனால் ஆத்திரமடைந்த சீனா, நான்சி பெலூசி வந்து இறங்கிய 24 மணிநேரத்துக்குள் தைவானுக்கு செக் வைத்தது. சீனாவின் சுங்கவரித்துறை நிர்வாகம், “ தைவானிலிருந்து பழங்கங்கள், மீன்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. அதிகமான அளவில் பழங்களில் பூச்சிகொல்லி மருந்துகல் இருந்ததாலும், பழங்களின் பாக்கெட்டுகளில் கொரோனா வைரஸ் இருந்ததாகவும் கூறி இறக்குமதிக்கு தடைவிதித்து” உத்தரவிட்டது.

நெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தைவான் கார்டு வேண்டாம்:அமெரிக்கத் தூதருக்கு சீனா கடும் எச்சரிக்கை

சீனா வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,  “ சீனாவிலிருந்து இயற்கை மணலை தைவானுக்கு ஏற்றுமதி செய்யத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், தடை உத்தரவுக்கான காரணம் ஏதும் தெரிவிக்கவில்லை. தைவானுக்கு ஏற்றுமதியை சீனா தடை செய்வது முதல்முறை அல்ல. இதற்குமுன் கடந்த 2021ம் ஆண்டு அன்னாசிப்பழம் இறக்குமதிக்கு சீனா தடை விதித்தது. 
 

click me!