சீனாவின் உருட்டல், மிரட்டல், போர் ஒத்திகை இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம் என்று தைவான் அதிபர் சாய் இங் வென் துணிச்சலாகப் பேசியுள்ளார்.
சீனாவின் உருட்டல், மிரட்டல், போர் ஒத்திகை இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம் என்று தைவான் அதிபர் சாய் இங் வென் துணிச்சலாகப் பேசியுள்ளார்.
தென் சீனக் கடலில் இருக்கும் தீவான தைவானுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சீனாவலிருந்து பிரிந்து சென்ற தைவான் சுதந்திரம் குறித்து எந்த நாடு பேசினாலும், வெளிநாட்டு தலைவர்கள் சென்றாலும் சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
undefined
நெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தைவான் கார்டு வேண்டாம்:அமெரிக்கத் தூதருக்கு சீனா கடும் எச்சரிக்கை
இந்நிலையில் அமெரி்க்க பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலூசி ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர், மலேசியா சென்ற நான்சி பெலூசி அங்கு பயணத்தை முடித்துக்கொண்டு தைனாவுக்கு சென்றார். தைவான் சென்ற நான்சி பெலூசிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
தைவானுக்கு நான்சி பெலூசி செல்வதற்கு முன் சீனா கடுமையாக எதிர்த்தது. தைவானுக்கு நான்சி பெலூசி சென்றால், அதற்குரிய விலையை அமெரிக்க தர வேண்டியிதிருக்கும், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தைவானை எங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முயல்வது நெருப்புடன் விளையாடுவது போலாகும் என்று அமெரிக்காவுக்கு சீனா மிரட்டல் விடுத்தது.
சீனாவுக்கு தண்ணி காட்டிய அமெரிக்கா; பிலிப்பைன்ஸை சுற்றி தைவான் சென்றடைந்தார் நான்சி பெலோசி!!
அதுமட்டுமல்லாமல் அமெரிக்கத் தூதரை நேரில் அழைத்து சீனா கடும் எச்சரிக்கை விடுத்தது. மேலும் தைவானைச் சுற்றியும், தைவானை நோக்கியும் போர் ஒத்திகையையும், போர் விமானங்களை பறக்கவிட்டும் சீனா மிரட்டி வருகிறது
இந்நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலூசியுடன், தைவான் அதிபர் சாய் இங் வென் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புக்குப்பின் தைனா அதிபர் சாய் இங் வென் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “ சீனாவிடம் இருந்து ராணுவ ரீதியான மிரட்டல்கள் அதிகரித்துள்ளது.
ஆனால், இதற்கெல்லாம் தைவான் பணிந்துவிடாது. நாங்கள் எங்கள் சுதந்திரம், ஜனநாயகத்துக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.
நான்சி பெலூசி தைவான் சென்றால் அதற்குரிய விலை கொடுப்பீர்கள்: அமெரி்க்காவுக்கு சீனா எச்சரி்க்கை
மிகுந்த கடினமான நேரத்தில் தைவானுக்கு ஆதரவு அளித்து, உறுதியான நடவடிக்கை எடுத்த நான்சி பெலூசிக்கு நன்றி தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்
தைவான் நாடாளுமன்றத்துக்கு வெளியே, சீனாவுக்கு ஆதரவாக திரண்ட சிலர் கோஷமிட்டு, நான்சி பெலூசி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 71வயதான ஆரசியல் ஆய்வாளர் லீ காய் டி கூறுகையில் “ சீனாவுடனான பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள அமெரிக்கா பகடைக் காயாக தைவானைப் பயன்படுத்துகிறது. அமெரிக்கா தொடர்ந்து இதுபோன்று செய்தால், தைவானுக்கும் உக்ரைன் நிலைமைதான் ஏற்படும்” எனத் தெரிவித்தார்
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இதைத் தொடர்ந்து சீனாவும் தங்கள் மீது எந்த நேரத்திலும் இதுபோன்ற முடிவை எடுக்கலாம் என்ற அச்சம் தைவானுக்கு அதிகரித்துள்ளது.