எங்கள் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலூசி சென்றிருப்பது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம். தைவான் கார்டை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சீனா எச்சரித்துள்ளது.
எங்கள் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலூசி சென்றிருப்பது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம். தைவான் கார்டை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சீனா எச்சரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்க செய்யும் தவறுகளுக்கு நிச்சயம் விலை கொடுக்க வேண்டியதிருக்கும். தைவானை எந்த வகையில் பயன்படுத்த நினைத்தாலும் அமெரிக்கா நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று சீனா கடுமையாக எச்சரித்துள்ளது
தில்லாக தைவான் வந்திறங்கிய நான்சி பெலோசி அதிரடி அறிக்கை; மிரட்டும் சீனா!!
கடந்த 1949ம் ஆண்டு சீனாவில் நடந்த உள்நாட்டுப் போரில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சீனாவும் தைவானும் பரிந்தன. இருப்பினும் தைவானுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் சுதந்திரம் குறித்து எந்த நாடு பேசினாலும், வெளிநாட்டு தலைவர்கள் சென்றாலும் சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் அமெரி்க்க பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலூசி ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர், மலேசியா சென்ற நான்சி பெலூசி அங்கு பயணத்தை முடித்துக்கொண்டு தைனாவுக்கு சென்றார். தைவான் சென்ற நான்சி பெலூசிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
தைவானுக்கு 25 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்காவிலிருந்து உயர்பதவியிலிருக்கும் ஒருவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போருக்கு தயாராகும் சீனா; தைவான் வரும் நான்சி பெலோசியை வரவேற்க சிவப்பு பட்டுக் கம்பளம் தயார்!!
ஆனால், நான்சி பெலூசி தைவான் செல்வதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதோ, அங்கு செல்வதையோ சீனா விரும்பவில்லை. இந்த எதிர்ப்பையும் மீறி நான்சி பெலூசி தைவான் சென்றதையடுத்து, சீன ராணுவத்தின் 21 போர் விமானங்கள் தைவானை நோக்கி போர்ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் நிகோலஸ் பர்ன்ஸை நேரில் அழைத்து சீனா கடும் எச்சரிக்கை செய்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஜி பெங், அவசர சம்மன் அனுப்பி நேற்று இரவு அமெரிக்க தூதரை அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்தார்.
சீன வெளியுறவுதுறை இணை அமைச்சர் ஜி பெங் விடுத்த எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:
எங்களைப் பொறுத்தவரை தைவான் எங்களிடம் இருந்து பிரிந்து சென்ற மாநிலம். ஆனால், தைவானுக்கு நான்சி பெலூசி செல்ல வேண்டாம் என்று எச்சரித்தும் அவர் அங்கு சென்றுள்ளார். அமெரிக்கா செய்யும் தவறுகளுக்கு அந்த நாடு நிச்சயம் விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.
உங்கள் தவறுகளை உடனடியாக திருத்திக்கொண்டு, நடைமுறைக்கு சாத்தியமான நடவடிக்களை எடுங்கள். தைவானுக்கு பெலூசியின் வருகை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். நெருப்புடன் விளையாடவேண்டாம் என்று மீண்டும் எச்சரிக்கிறோம்
தவறான பாதையில் மேலும் அமெரிக்க செல்லக்கூடாது. அமெரிக்காவால் அதிகரிக்கும் பதற்றம், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை கடுமையாகப் பாதிக்கும். தைவான் கார்டை பயன்படுத்தி அரசியல் விளையாட்டு விளையாடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும். சீனாவை தைவான் மூலம் சீண்டிப்பார்ப்பதை நிறுத்த வேண்டும், சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை அமெரிக்க நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் செயல்பாடுகள் மோசமானவை, அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும். அமெரி்க்காவின் செயல்களைப் பார்த்துக்கொண்டு சீனா சும்மா அமர்ந்திருக்காது.
இவ்வாறு ஜி பெங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.