Pentagon Report on China:இந்தியாவுடனான உறவில் தலையிடாதீர்கள் என அமெரிக்காவை சீனா எச்சரித்தது:பென்டகன் அறிக்கை

By Pothy Raj  |  First Published Nov 30, 2022, 3:25 PM IST

இந்தியாவுடனான எங்கள் உறவில் தலையிடாதீர்கள் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது என்று அமெரிக்காவின் பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவுடனான எங்கள் உறவில் தலையிடாதீர்கள் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது என்று அமெரிக்காவின் பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதைத் தடுப்பதற்காக சீனா இந்தியாவுடன் எல்லைப்பிரச்சினையை உருவாக்குகிறது என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

Latest Videos

undefined

2020ம் ஆண்டு, கிழக்கு லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சினை காரணமாக இந்தியா ராணுவத்தினரும், சீன ராணுவத்தினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்குப்பின் இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது

சாதாரண பெண்கள் ஹிஜாப் அணியனும்; பாக்.அமைச்சர் மட்டும் அணிய மாட்டங்களா? தலிபான்களை தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

இந்நிலையில் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் சீனா குறித்து ஓர் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது: அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் லடாக் எல்லையில் நிலவும் எல்லைப் பிரச்சினையில் தலையிடக்கூடாது என்று அமெரி்க்காவை சீனா சமீபத்தில் எச்சரித்தது. கிழக்கு லடாக்கில் நிலவும் எல்லைப் பிரச்சினையை சீனா தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டு வருகிறது, சீனாவைப் பொறுத்தவரை எல்லையில் நிலைத்தன்மையை மட்டும்தான் விரும்புகிறது.

இந்தியாவும், அமெரிக்காவுக்கும் நட்புறவில் நெருக்கமாக இருப்பதை சீனாவிரும்பவில்லை. இதைத் தடுக்கவே, எல்லையில் அடிக்கடி இந்தியாவுடன் பிரச்சினைகளை சீனா உருவாக்கி, பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவுடன் எங்களுக்கு இருக்கும் எல்லைப் பிரச்சினையில் எங்களை தலையிடக்கூடாது என்று சமீபத்தில் சீனா எச்சரித்தது.

ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்ட வட கொரிய அதிபர்... ஆச்சரியத்தில் ஆழ்ந்த உலக நாடுகள்!!

2021ம் ஆண்டில் இருந்து லடாக் எல்லையில் சீனா கட்டுமானங்களை எழுப்பி வருகிறது.  இந்தியா, சீனா தரப்பில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் அது குறைந்த அளவே பயன் அளித்தது. இருதரப்பிலும் எல்லையில் இருக்கும் நன்மைகளை இழக்கிறார்கள். 

இருதரப்பு நாடுகளின் ராணுவுமே ஒருவரைஒருவர் குற்றம்சாட்டி, படைகளை வாபஸ் பெறுங்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவும் சம்மதிக்கவில்லை, சீனாவும் அதற்கு ஒத்துப்போகவில்லை
இந்தியா கட்டுமானங்களை எழுப்புகிறது என்றுசீனா குற்றம்சாட்டுகிறது, ஆக்கிரமிக்கிறது என்று குற்றம்சாட்டுகிறது. ஆனால், சீனா இந்திய எல்லைப்புறங்களில் அத்துமீறி நுழைகிறது என்று இந்தியா குற்றம்சாட்டுகிறது.

சீனாவில் ‘ஜூரோ கோவிட்’ சரிவராது!அமைதியாக போராடலாம்! ‘மக்களை உசுப்பேற்றும் அமெரிக்கா

இரு நாடுகளும் கடந்த 2020ம் ஆண்டு முதலே எல்லைப்பகுதியில் படைகளை குவித்து, கட்டுமானங்களை எழுப்புகிறார்கள். கல்வான் பள்ளத்தாக்கு மோதல் இரு நாடுகளின் 46 ஆண்டுகால வரலாற்றில் நடந்த மோசமான மோதலாக அமைந்தது.

இந்தியா தரப்பில் 20 வீரர்களும் சீனா தரப்பி்ல் 4 வீரர்களும் உயிரிழந்தார்கள் என்று கடந்த 2020, ஜூன் 15ம் தேதி சீன ராணுவம் தெரிவித்தது” எனத் தெரிவித்துள்ளது

click me!