அட கடவுளே... கொரோனாவை பரப்பியது அமெரிக்காவா..?? உலகையே அதிரவைத்த சீனா..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 13, 2020, 1:12 PM IST
Highlights

வூகானில் கொரோனாவை அமெரிக்க ராணுவத்தினர் பரப்பி இருக்கலாம் என சீனா பகிரங்கமாக  குற்றம்சாட்டியுள்ளது. சீனாவின் இந்த புதிய குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  சீன வெளியுறவுத்துறை இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவித்துள்ளது .

வூகானில் கொரோனாவை அமெரிக்க ராணுவத்தினர் பரப்பி இருக்கலாம் என சீனா பகிரங்கமாக  குற்றம்சாட்டியுள்ளது. சீனாவின் இந்த புதிய குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  சீன வெளியுறவுத்துறை இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவித்துள்ளது .  சீனாவில் தோன்றிய கோரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி உள்ளது  சுமார் 100க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் மோசமான  விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது .  இதுவரை சீனாவில்  3,113 பேர்  உயிரிழந்துள்ளனர் .  உலக அளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்துள்ளது . உலகளவில் சுமார் 1, 20 லட்சம்  பேருக்கு இந்த வைரஸ்  தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த வைரசுக்கு இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மனித குலத்தின் கொடிய எதிரியாக கருதப்படும் கொரோனா சீனா பயோவார் முயற்சியில் ஈடுபட்ட போது தவறுதலாக வெளியான வைரஸ் கிருமிதான் கொரோனா என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவை குற்றஞ்சாட்டின.   ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்த சீனா  முதலில் இந்த வைரஸ் பாம்புகள் , மற்றும் எறும்புத்தின்னி போன்ற உயிரினங்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என கூறியது.   ஆனால் தற்போது இந்த வைரஸ் பரவலுக்கு  புதிய காரணத்தை தெரிவித்துள்ளது அதாவது சீனாவுக்குள் அமெரிக்க ராணுவம்தான் கொரோனா வைரசை பரப்பி இருக்கலாம் என்றும்  அந்நாட்டு அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார் .  எவ்வித ஆதாரமும் இல்லாமல் அமெரிக்கா மீது  குற்றச்சாட்டை சீன அதிகாரி முன்வைத்துள்ளார் . 

 

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஸோ லிஜியான்,   சீனாவிலுள்ள சமூக வலைதளங்களில் இது போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பரவி வந்த நிலையில்   அமெரிக்க ராணுவம் தான் கொரோனாவை கொண்டுவந்திருக்கும் என கூறியுள்ளார்.  அமெரிக்காவில் கொரோனாவுக்கு எத்தனைபேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.  என கேள்வி எழுப்பியுள்ள அவர்.   இதில் வெளிப்படையாக இருங்கள் ,  உங்கள் தகவல்களை வெளிஉலகிற்கு தெரிவியுங்கள் ,  அமெரிக்கா இதுகுறித்து நிச்சயம் விளக்கம் அளிக்கவேண்டும் என கூறியுள்ளார்.

 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்தை நெருங்கிவிட்டது, 1.30 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படியொரு குற்றச்சாட்டை சீனா வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலு இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவின் பாதுகாப்பு அலோசகர்  முற்றிலுமாக மருத்துள்ளது. இந்த வைரஸ சீனாவில் இருந்துதான் பரவியது என தெரிவித்துள்ளார்.    

 

 

click me!