சீனாவை ஓவர்டேக் செய்யும் இத்தாலி...!! கொத்துகொத்தாக உயிர்பலி வாங்கும் கொரோனா..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 13, 2020, 12:03 PM IST
Highlights

குறிப்பாக இத்தாலி ,  ஈரான் ஜப்பான் ,  தென் கொரியா ,  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது . 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் ஒரேநாளில் 189 பேர் உயிரிழந்துள்ளனர் .  இதனால் பலி எண்ணிக்கை நாட்டில் 1016 ஆக உயர்ந்துள்ளது .  இதனால் இத்தாலியில் மக்கள் உச்சகட்ட பீதியில் உறைந்துள்ளனர்.  மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 100 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது .  சீனாவைப் போலவே மற்ற நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகிறது .  குறிப்பாக இத்தாலி ,  ஈரான் ஜப்பான் ,  தென் கொரியா ,  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது .

 

இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் .  1 லட்சத்தி பத்தாயிரத்துக்கும் அதிகமானோருக்கு  வைரஸ் பரவியுள்ளது இந்நிலையில் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் வேகமாக பரவுகிறது . இந்நிலையில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .  ஆனாலும் இத்தாலியில் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது .   இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 189 பேர் உயிரிழந்துள்ளனர்.   இதனால் அங்கு வைரஸ் தாக்குதலில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1016 ஆக அதிகரித்துள்ளது . 

வைரசை கட்டுபடுத்தும் நோக்கில் இத்தாலி தலைநகரான ரோமில் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை விமான நிலையத்தை மூட இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது வைரஸை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .  மருந்தகங்கள் ,  மளிகைப் பொருட்கள் ,  உள்ளிட்ட வசதிகள் தவிர மற்றவகை அங்காடிகள் அனைத்தையும் மூட இத்தாலி பிரதமர்  கியூசபே  காண்டே உத்தரவிட்டுள்ளார் .  அதேபோல் வீட்டை விட்டு வெளியேற மக்களுக்குத் அரசு தடை விதித்துள்ளது .  மேலும் ஆயிரம் பேரின்  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் , உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது . 
 

click me!