உலகத்திற்கே காத்திருக்கும் பேரதிர்ச்சி...!! அமேசான் காடுகள் இன்னும் சில ஆண்டுகளில் என்னவாகப் போகிறது தெரியுமா.

By Ezhilarasan BabuFirst Published Mar 13, 2020, 12:31 PM IST
Highlights

இன்னும் 50 ஆண்டுகளில் அமேசான் மழைக்காடுகள் முற்றிலுமாக அழிந்துவிடும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில்  அதன் ஈரத் தன்மை முற்றிலுமாக வறண்டு வனம் நிலைகுலைந்துவிடுமென விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர் .  

இன்னும் 50 ஆண்டுகளில் அமேசான் மழைக்காடுகள் முற்றிலுமாக அழிந்துவிடும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில்  அதன் ஈரத் தன்மை முற்றிலுமாக வறண்டு வனம் நிலைகுலைந்துவிடுமென விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர் .  தென்அமெரிக்காவின் ஆற்றுப்படுகையில் சுமார் 70 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது அமேசான் மழைக்காடுகள் . இதில் காடுகள் மட்டும் 55 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும். 

இதில் 60% பிரேசில் நாட்டிலும் எஞ்சிய பகுதிகள் கொலம்பியா, பெரு, வெனிசூலா , பொலிவியா ,  கயானா ,  சுரிநாம் , ஈக்வடார் ஆகிய  நாடுகளில் பரந்து விரிந்து கிடக்கின்றன .  ஒட்டு மொத்த பூமியின் 10% அளவிற்கு பல்லுயிர் பெருக்கத்தின்  தாய் வீடாக இந்த அமேசான் காடுகள் இருக்கின்றன .  இயற்கையின் கொடையாகக் கருதப்படும் இந்த அமேசான் மழைக்காடுகள் அதீத பருவநிலை மாற்றம் ,  மற்றும் புவி வெப்பமடைதல் ,  கட்டுக்கடங்காத கோடை வெயில் போன்ற காரணங்களால் கடந்தாண்டு அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில்  பல லட்சம்  ஏக்கரிலான வனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. 

இத்தொடர் தீவிபத்துக்கள் காரணமாக கோடிக்கணக்கான வன உயிரினங்கள் தீயில் சிக்கி உயிரிழந்தன.  இதுபோன்ற இயற்கை பேரழிவுகளுக்கு உடனடி தீர்வு காணாவிட்டால் உலகின் மிகப்பெரிய இந்த பல்லுயிர் பெருக்க மழைக்காடுகளை இழக்க நேரிடும் என ஐநாவின் காலநிலை அறிவியல் ஆலோசனைக்குழு எச்சரித்துள்ளது .  இதைத்தொடர்ந்து மாசு மற்றும் அமில மயமாக்கலை கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய கரீபியன் பவளப்பாறைகளும்  அடுத்த 15 ஆண்டுகளில் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளது .

 

click me!