ஊழல் குற்றச்சாட்டு... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் கைது...!

By vinoth kumar  |  First Published Oct 11, 2019, 4:10 PM IST

சவுத்ரி சர்க்கரை ஆலை கருப்புப் பண பரிமாற்றம் தொடர்பாகநவாஸ் ஷெரீப்புக்கு எதிராக மேலும் ஒரு ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், சிறையில் உள்ள நவாஸ் ஷெரீப்பை சர்க்கரை ஆலை வழக்கில் மீண்டும் தேசிய பொறுப்புடைமை அதிகாரிகள் கைது செய்தனர். 


சர்க்கரை ஆலை முறைக்கேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வந்த நவாஸ் ஷெரீப் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியை இழக்க நேரிட்டது. மேலும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. 

Latest Videos

இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக உண்மை என நிரூபிக்கப்பட்டதையடுத்து நவாஸ் ஷெரீப் அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து லாகூர் நகரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதனிடையே, சவுத்ரி சர்க்கரை ஆலை கருப்புப் பண பரிமாற்றம் தொடர்பாகநவாஸ் ஷெரீப்புக்கு எதிராக மேலும் ஒரு ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், சிறையில் உள்ள நவாஸ் ஷெரீப்பை சர்க்கரை ஆலை வழக்கில் மீண்டும் தேசிய பொறுப்புடைமை அதிகாரிகள் கைது செய்தனர்.

click me!