பிரிட்டன் நாட்டை 70 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ராணி எலிசபெத் இன்று காலமானார். பிரிட்டன் நாட்டின் மன்னராக இவரது மூத்த மகன், 73 வயதாகும் சார்லஸ் பிரிட்டன் நாட்டின் மன்னராக முடி சூட இருக்கிறார்.
ராணி எலிசபெத்தின் தந்தை கிங் ஜார்ஜ் VI திடீரென இறந்தபோது, எதிர்பாராத விதமாக 25 வயதில் ராணியாக எலிசபெத் மகுடம் சூடினார். ஆனால், எலிசபெத்தை போல் இல்லாமல், இவரது மகனான, 73 வயதான இளவரசர் சார்லஸ் தற்போது மகுடம் அணிவதற்கு தயாராகி வருகிறார். நீண்ட காலம் ஆட்சி பொறுப்பில் இருந்தவர் என்ற பெயர் ராணி எலிசபெத்துக்கு கிடைத்துள்ளது. இவரது தந்தை சிறிய வயதில் இறந்தாலும், இவரது தாயார் 101 வயது வரை வாழ்ந்தார்.
ராணி எலிசபெத்துக்குப் பின்னர், இவரது மகனும், இளவரசருமான சார்லஸ் பிரிட்டன் நாட்டின் மன்னராகிறார். ராணி உடல்நலம் பாதிக்கப்பட்டு, நாட்டின் செயல்திட்டங்களில் பங்கு கொள்ள முடியாமல் போகும்பட்சத்தில், அவரால் ராணி என்ற அந்தஸ்தை இழக்கிறார். இந்த இடத்திற்கு வருவதற்கு ஒருவரை நியமிக்க வேண்டும். அதற்காக, ராணியின் உடல்நலம் குறித்த மருத்துவ சாட்சியம் தேவைப்படும். மேலும், மூவரின் அனுமதி தேவைப்படும். அவர்கள், ராணியின் கணவரின் அனுமதி, (இளவரசரும், ராணியின் கணவருமான பிலிப் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார்), இரண்டாவது நாடாளுமன்ற சபாநாயகரின் அனுமதி, தலைமை நீதிபதி ஆகியோர் சம்மதிக்க வேண்டும். இதெல்லாம் நடைமுறையாக இருக்கும்பட்சத்தில் இன்று ராணி காலாமானார்.
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!!
ஏற்கனவே ராணியில் தனித்து தன்னுடைய பணிகளை செய்ய முடியாமல் இருந்தார். ராணி என்ற பட்டத்துடன் அவர் இருக்க, அவரது மகன் சார்லஸ் தான் பின்னணியில் இருந்து ராணியின் பணிகளை கவனித்து வந்தார். சார்லஸ் மன்னராக பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் பெயர் மாற்றம் ஏற்படும். சாரலஸ் மன்னராக பொறுப்பேற்கும் பட்சத்தில், அவரது மனைவி கமீலா சார்லஸ் ராணியாகிறார்.
ராணி அவரது வாழ்க்கை முழுவதும், பிரபலமாக இருந்தார. இங்கிலாந்துக்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து உட்பட 14 பிரிட்டிஷ் காலனிகளின் ராணியாகவும், அதிகாரத்தை தீர்மானிப்பவராகவும் இருந்தார். இத்துடன், 56 நாடுகளைக் கொண்ட காமன்வெல்த்தின் தலைவராகவும் இருந்தார். இங்கிலாந்து தேவாலயத்தின் ஆளுநராகவும் இருந்தார்.
ராணி இறக்கும்பொது அவரது அருகில் அவரது மகன்கள் சார்லஸ், இளவரசி அன்னே, இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் ஆகியோர் உடனிருந்தனர். இவர்களுடன் மன்னராக மகுடம் சூட இருக்கும் சார்லஸ்ஸின் மகன்களும், இளவரசர்களுமான வில்லியம், ஹாரி இருந்தனர்.
A statement from His Majesty The King: pic.twitter.com/AnBiyZCher
— The Royal Family (@RoyalFamily)