பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்!!

Published : Sep 08, 2022, 11:30 PM ISTUpdated : Sep 09, 2022, 12:52 AM IST
பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்!!

சுருக்கம்

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். லண்டனில் உள்ள மேஃபேரில் கடந்த 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 இல் பிறந்தார் எலிசபெத் மகாராணி. பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த 1952 முதல் பிரிட்டன் மகாராணியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரது உடல்நிலை மோசமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்தது. 96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்த போதும் அவர், அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார்.

15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த ராணி எலிசபெத்; 15வது பிரதமர் என்ற சிறப்பை பெற்றார் லிஸ் டிரஸ்!!

இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ராணியில் உடல் நிலை ஆரோக்கியமாக இல்லை என்று கூறப்பட்ட நிலையில் பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது. இதுக்குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரசபதவியில் இருந்தவர். அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணங்களின் போது ராணி இரண்டாம் எலிசபெத்துடன் நான் மறக்கமுடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. 

இதையும் படிங்க: ராணி எலிசபெத் மறைவுக்குப் பின்னர் பிரிட்டன் நாட்டின் மன்னராகிறார் சார்லஸ்; யார் இவர்?

ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார். அந்த சைகையை நான் எப்போதும் போற்றுவேன். ராணி இரண்டாம் எலிசபெத் நம் காலத்தின் உறுதியானவராக நினைவுகூரப்படுவார். அவர் தனது தேசத்திற்கும் மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைமையை வழங்கினார். பொது வாழ்வில் கண்ணியத்தை வெளிப்படுத்தினார். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இங்கிலாந்து மக்களுடனும் உள்ளன என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!