Canada bans Gotabaya,Mahinda Rajapaksa:இலங்கை முன்னாள்அதிபர்கள் கோத்தபய, மகிந்தா ராஜப்கசேவுக்கு கனடா அரசு தடை

By Pothy Raj  |  First Published Jan 11, 2023, 9:42 AM IST

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பாவித் தமிழர்களை கொன்றுகுவித்தமைக்காக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரின் சகோதரரும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே உள்பட இலங்கையைச் சேர்ந்த 4 பேருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.


இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பாவித் தமிழர்களை கொன்றுகுவித்தமைக்காக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரின் சகோதரரும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே உள்பட இலங்கையைச் சேர்ந்த 4 பேருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.

இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டமைக்காக கனடா நாட்டுக்குள் இவர்கள் 4 பேரும் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் 2-ம் கான்ஸ்டென்டைன் காலமானார்

இந்த தடை இலங்கை ராணுவ அதிகாரிகள் சுனில் ரத்னநாயகே மற்றும் கமாண்டர் சந்தனா பி ஹெட்டியாசித்தே ஆகியோருக்கும் பொருந்தும் என்று கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடந்த உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர். மனிதநேயமற்று நடந்த இலங்கை ராணுவம், அரசுக்குஎதிராக உலகளவில், ஐ.நாவில் கண்டனம் எழுந்தது. 

அப்போது அதிபராக இருந்த மகிந்தரா ராஜகபக்சே, ராணுவஅமைச்சராக இருந்த கோத்தபயராஜபக்சே இருவருக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை குழு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அமெரிக்கா போன ஜெயிர் பொல்சனரோ மருத்துவமனையில் அனுமதி

அதன்பின் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக வந்த கோத்தபய ராஜபக்சேவின் நிர்வாகச் சீர்கேட்டால் அந்நாடு மோசமான நிலைக்குச் சென்று கடனில் தத்தளித்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சேவையும், பிரதமர் பதவியிலிருந்து மகிந்தா ராஜபக்சேவையும் அகற்றினர். 

இந்த சூழலில், கோத்தபய ராஜபக்சே, மகிந்தா ராஜபக்சே உள்ளிட்ட இலங்கையைச்ச சேர்ந்த 4 பேருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.

கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

இலங்கையைச் சேர்ந்த மகிந்தா ராஜபக்சே, கோத்தபய ராயபக்சே, சுனில் ரத்னநாயகே மற்றும் கமாண்டர் சந்தனா பி ஹெட்டியாசித்தே ஆகியோர் கனடாவுக்குள் நுழையத் தடைவிதிக்கப்படுகிறது. கனடாவில் எந்தவிதமான செயல்பாட்டிலும், சொத்துக்கள் வாங்குவதிலும், வணிகம் செய்வதிலும், நிதித்தொடர்பான எந்த செயல்பாடுகளிலும் இவர்கள் ஈடுபடத் தடைவிதிக்கப்படுகிறது.

பிரேசில் நாட்டில் என்ன குழப்பம் நடக்கிறது? ஏன் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்? விரிவான பார்வை

கனடா குடியேற்றச்ச ட்டத்தின்படி இந்த 4 பேரும் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழர்களை கொன்று குவித்தமைக்காக சுனில் ரத்தனநாயகேவுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. ஆனால், அதை அதிபர் குறைத்துவிட்டார்என்பது குறிப்பிடத்தக்கது
 

click me!