MRI இயந்திரத்திற்குள் சிக்கிய செவிலியர்.. நசுக்கப்பட்ட கொடுமை.. இறுதியில் என்ன ஆனது? யார் மீது தவறு?

By Ansgar R  |  First Published Oct 30, 2023, 9:27 PM IST

கலிபோர்னியாவில் உள்ள மருத்துவ மையத்தில் நடந்த கொடூர விபத்தின் போது ஒரு செவிலியர் MRI இயந்திரத்திற்கும், படுக்கைக்கும் இடையில் சிக்கிக்கொண்டுள்ளார். ஐனா செர்வாண்டஸ் என்ற அந்த செவிலியர் கடுமையாக நசுக்கப்பட்டுள்ளார்.


மருத்துவமனை படுக்கையை அதன் காந்த சக்தியால் MRI இயந்திரம் இழுத்ததால் அந்த செவிலியர் உள்ளே இழுக்கப்பட்டு, படுக்கை மட்டும் இயந்திரத்திற்கு நடுவில் சிக்கியுள்ளார். அந்த செவிலியருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அளவிற்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. ஆவணங்களின்படி, இரண்டு உட்பொதிக்கப்பட்ட திருகுகள் அகற்றப்பட்டன. மேலும் அந்த செவிலியர் பரிசோதனைக்காக அழைத்து ஸ்னேட்ரா படுக்கையில் இருந்து நோயாளி, தரையில் விழுந்துள்ளார். அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இந்த ஆண்டு துவக்கத்தில் பிப்ரவரியில் தான் இந்த சம்பவம் நடந்திருந்தாலும், பல மாதங்கள் கழித்தும் அந்த விசாரணை இன்னும் முடிக்கப்படவில்லை என்று ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. கலிபோர்னியா பொது சுகாதாரத் துறையின் ஆய்வில் ரெட்வுட் நகர மையம் "பாதுகாப்பான முறையில் கதிரியக்க சேவைகளை வழங்கத் தவறிவிட்டது" என்று அறிக்கை மேலும் கூறியது.

Latest Videos

undefined

சிங்கப்பூரில் அதிகரிக்கும் "மின் தீ விபத்துகள்".. ஏன்? சிங்கப்பூரர்கள் தங்கள் வீடுகளை எப்படி பாதுகாக்கலாம்?

சம்பவத்தின் போது அந்த அறைக்குள் எம்ஆர்ஐ பணியாளர்கள் யாரும் இருக்கவில்லை என்றும் விசாரணையாளர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் கைசரின் பல MRI பாதுகாப்புக் கொள்கைகளையும் மீறியதாக அறிக்கை மேலும் கூறியது. விசாரணையில், ஊழியர்கள் பாதுகாப்புப் பயிற்சியைப் பெறவில்லை என்பதும், மருத்துவமனை கதவு அலாரத்தை சோதிக்கத் தவறியதும் தெரியவந்தது.

"பல பாதுகாப்பு நடவடிக்கை மீறல்.. பாதுகாப்பற்ற நடைமுறைகளின் கலாச்சாரத்தை உருவாக்குகிறது" என்று கலிபோர்னியா பொது சுகாதாரத் துறையின் விசாரணை கூறியது. கெய்சர் பெர்மனென்டே சான் மேடியோவின் மூத்த துணைத் தலைவர் ஷீலா கில்சன், செவிலியர் அவர்களுக்குத் தேவையான கவனிப்பையும் ஆதரவையும் உடனடியாகப் பெற்றார் என்று கூறினார்.

தாய்லாந்து to சிங்கப்பூர் பயணம்.. Flightல் வந்து Chicken Rice வாங்கி சென்ற உணவு டெலிவரி ஏஜென்ட் - ஏன் இப்படி?

"இது ஒரு அரிதான நிகழ்வு என்றும், ஆனால் ஒரு விபத்து ஏன் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அது மீண்டும் நிகழாமல் தடுக்க மாற்றங்களைச் செயல்படுத்தும் வரை நாங்கள் திருப்தியடைவதில்லை" என்றும் கில்சன் கூறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!