இந்த செயல்முறையில் விலங்கு அல்லது காய்கறி கொழுப்பு எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் தயாரிக்கப்பட்ட வெண்ணெய் இயற்கையான வெண்ணெய் போலவே சுவை இருப்பதாகவும் சேவர் நிறுவனம் கூறுகிறது.
மைக்ரோசாஃப்ட் தொழிலதிபர் பில் கேட்ஸ் ஆதரவு பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று தெர்மோகெமிக்கல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காற்றில் இருந்து வெண்ணெய் தயாரித்து அதிசய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆதரவு பெற்ற சேவர் (Savor) என்ற அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்த சாதனையைச் செய்துள்ளது. காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு (CO2) வாயுவின் கார்பன் அணுக்களையும் நீராவியில் இருந்து ஹைட்ரஜன் அணுக்களையும் சேர்த்து ஆக்ஸிஜனேற்றம் செய்து வெண்ணையை தயாரித்துள்ளனர்.
undefined
இந்த செயல்முறையில் விலங்கு அல்லது காய்கறி கொழுப்பு எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் தயாரிக்கப்பட்ட வெண்ணெய் இயற்கையான வெண்ணெய் போலவே சுவை இருப்பதாகவும் சேவர் நிறுவனம் கூறுகிறது.
மோதிரத்தை கேஜெட்டாக மாற்றி சாம்சங்! வெற லெவல் AI அம்சங்களுடன் 'கேலக்ஸி ரிங்'!
உலகையே உலுக்கி வரும் காலநிலை மாற்றத்திற்கு முக்கியமானக் காரணங்களில் ஒன்றாக புவி வெப்பமடைதலை விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிக்க காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிப்பதும் ஒரு காரணம்.
இதனால் காற்றில் கார்பன் அளவைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து உலகம் முழுவதும் உள்ள காலநிலை மாற்றத்துக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு வாயுவில் (CO2) இருந்து கார்பனை வித்தியாசமான ஆய்வுக்கு பயன்படுத்தி வெண்ணெய் தயாரித்திருப்பது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
125 மில்லியன் ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய டைனோசர் புதைபடிவ எச்சங்கள் கண்டுபிடிப்பு!