125 மில்லியன் ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய டைனோசர் புதைபடிவ எச்சங்கள் கண்டுபிடிப்பு!

By SG BalanFirst Published Jul 11, 2024, 12:10 AM IST
Highlights

இந்த டைனோசரின் புதைபடிவ எச்சங்கள் பெரிய அமெரிக்கக் காட்டெருமையின் எடையைப் போல சுமார் 900 கிலோகிராம் எடையுள்ளது. இது தாவரங்களை உண்ணும் டைனோசராக இருக்கலாம்.

சுமார் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த தாவரங்களை உண்ணும் டைனோசரின் புதைபடிவ எச்சங்கள் இங்கிலாந்தின் வைட் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதான் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட முழுமையான டைனோசர் புதைபடிவ எச்சங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதைப்பற்றி ஜர்னல் ஆஃப் சிஸ்டமேடிக் பேலியோண்டாலஜி என்ற பத்திரிகையில் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மை ஆசிரியரான முதன்மை ஆசிரியர் ஜெர்மி லாக்வுட் கூறுகையில், "இந்த டைனோசரின் புதைபடிவ எச்சங்கள் பெரிய அமெரிக்கக் காட்டெருமையின் எடையைப் போல சுமார் 900 கிலோகிராம் எடையுள்ளது. இது தாவரங்களை உண்ணும் டைனோசராக இருக்கலாம்" என்கிறார்.

Latest Videos

அகழ்வாராய்ச்சிக்கு உதவிய போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான ஜெர்மி லாக்வுட், "கிரெட்டேசியஸ் காலகட்டத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த பல்வேறு வகையான டைனோசர்களைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள இது உதவுகிறது" என்றும் கூறுகிறார்.

ஸ்மார்ட்போன் முதல் ஸ்மார்ட் ரிங் வரை... மொத்த வித்தையையும் இறக்கிய சாம்சங்... கேஜெட் பிரியர்கள் குதூகலம்!

149 எலும்புகளால் ஆன ஒரு டைனோசரின் புதைபடிவ எச்சங்கள், 2013ஆம் ஆண்டு, மறைந்த புதைபடிவ சேகரிப்பாளரான நிக் சேஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள வைட் தீவில் உள்ள காம்ப்டன் விரிகுடாவின் பாறைகளில் அதனை நிக் கண்டெடுத்தார். அவரது நினைவாக, அதற்கு "காம்ப்டோனடஸ் சேசி" என்று பெயரிடப்பட்டது.

"டைனோசர் எலும்புகளைக் கண்டறிவதில் நிக்கிற்கு ஒரு தனித்துவமான திறமை இருந்தது... இது உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு" என்று லாக்வுட் சொல்கிறார். 

ஐரோப்பாவில் இதுவரை அறியப்பட்டதிலேயே மிகப் பெரிய பழங்கால இறைச்சி உண்ணும் டைனோசரின் எச்சங்கள் 2022 இல் இதே தீவில் கண்டுபிடிக்கப்பட்டன. அது கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்தது.

மியாமியில் ஒத்தையாக ஊர் சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்! க்யூட்டி, பியூட்டி என்று கொஞ்சும் ரசிகர்கள்!

click me!