Watch | RIP Cartoon Network | கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுகிறதா? அதிர்ச்சியில் 90's கிட்ஸ்!

By Dinesh TGFirst Published Jul 9, 2024, 8:21 PM IST
Highlights

கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் பலரின் குழந்தைப் பருவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. சேனல் மூடப்படலாம் என்ற வைரல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
 

X வலைதள பக்கத்தில் “RIPCartoonNetwork” என்ற ஹேஸ்டேக் திடீரென அதிகரித்தது, இது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, சிலர் சேனல் "மூடப்படும்" என்று கூறினர். "அனிமேஷன் வொர்க்கர்ஸ் இக்னிட்டட்" என்ற X கணக்கு "கார்ட்டூன் நெட்வொர்க் இறந்துவிட்டதா?!" என்ற பெயரில் பதிவிடப்பட்ட ஒரு வீடியோ வைரலான நிலையில், அதில், அனிமேஷன் ஸ்டுடியோக்கள் மிகவும் பின்தங்கியிருப்பதாகவும், அனிமேஷன் வணிகத்தில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடுகிறது.

கார்ட்டூன் நெட்வொர்க் நடைமுறையில் இல்லாமல் போனது மற்றும் பிற ஸ்டுடியோக்களும் அழிந்து வருகிறது என்பதை வைரல் வீடியோ கோடிட்டுக் காட்டுகிறது. இது அனிமேஷன் தொழிலாளர்களைப் பற்றியும் விவாதிக்கிறது, தொழிலாளர்கள் திரளான எண்ணிக்கையில் வேலையில்லாமல் போவார்கள் என்றும், மேலும் பலர் ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேலாக வேலையில்லாமல் உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Cartoon Network is dead?!?!

Spread the word about what’s at stake for animation!!! Post about your favorite Cartoon Network shows using

Active members of TAG can help by filling out your survey! Today (7/8) is the last day! pic.twitter.com/dHNMvA1q0A

— Animation Workers Ignited (@AWorkersIgnited)

Latest Videos

 

'A' என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்குதா..? அப்போ முதல்ல 'இத' படிங்க..!

கோவிட் லாக்டவுன் காலத்தில் அனிமேஷன் ஸ்டூடியோக்கள் வீட்டிலிருந்தே இயக்கப்பட்ட நிலையில், தடையின்றி உற்பத்தியைத் தொடரக்கூடிய ஒரே பொழுதுபோக்கு வடிவங்களில் ஒன்றாக இது அமைந்தது, ஆனால் ஸ்டுடியோக்கள் அடுத்தடுத்த திட்டங்களை ரத்துசெய்து, அவுட்சோர்சிங் வேலைகள் மற்றும் கலைஞர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்வதன் மூலம் அனிமேஷன் திரைத்துரை தொய்வை சந்தித்தன.

இதையும் படிங்க:  உங்கள் காலின் விரல்களை பார்த்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிஞ்சுக்கலாம் தெரியுமா..?

பெரிய பெரிய அனிமேஷன் ஸ்டுடியோக்கள், செலவினங்களைக் குறைப்பதன் மூலமும், ஊழியர்களைக் குறைப்பதன் மூலமும், CEOக்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களுக்கான பணப் பலன்களை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் தான். ஆகவே, நலிவடைந்த அனிமேஷன் துறையை மீட்டெடுக்கும் வகையில் இந்தக் கணக்கைப் பின்தொடர்வதன் மூலம் TAG (The Animation Guild) க்கு உதவ இன்னும் பல வழிகளுக்கு #RIPCartoonNetwork மற்றும் #StayTuned ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்களுக்குப் பிடித்த கார்ட்டூன் நெட்வொர்க் நிகழ்ச்சிகளைப் பற்றி இடுகையிடவும் என அந்த வைரல் வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  கார்த்திகை மாதம் பிறந்தவர்களின் பரம ரகசியம் பற்றி தெரியுமா...?

click me!