உலகின் பெரும்பாலான ஏழ்மையான நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தில் தான் உள்ளன.
உலகில் மொத்தம் 47 நாடுகள் தான் ஏழை நாடுகளாகக் கருதப்படுகிறது. உணவு, உடை மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகளைக் கூட பெறுவதற்கு அதன் குடிமக்கள் மிகவும்
சிரமப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், உலகின் பெரும்பாலான ஏழ்மையான நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தில் தான் உள்ளன.
அதிலும் குறிப்பாக, "புருண்டி" தான் உலகின் முதல் ஏழ்மையான நாடு. இந்த நாட்டின் 85 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கூட கிடைக்காமலும், ஒருநாளைக்கு 50 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதன் எல்லைகள் வடக்கில் ருவாண்டா, தெற்கிலும் கிழக்கிலும் தன்சானியா மற்றும் மேற்கில் காங்கோவுடன் உள்ளன.
புருண்டியின் நிலை எப்போதுமே இப்படி மோசமாக இருந்தது என்பதல்ல. 1996க்கு முன், இங்கு நிலைமை நன்றாக தான் இருந்தது. ஆனால், பெரிய பழங்குடியினரான Twa, Tutsi மற்றும் Hutu இடையேயான மோதல் இந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நிலையை ரொம்பவே மோசமாக்கியது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதனால்,
படிப்படியாக இந்த நாடு பொருளாதாரத்தில் பின்தங்கி உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது.
இதையும் படிங்க: உலகின் முதல் 10 ஏழ்மையான நாடுகள் எவை? பட்டியல் இதே!
மக்கள் தொகை: உலகின் ஏழ்மையான நாடான புருண்டியில் சுமார் 1.25 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் 85 சதவீதம் பேர் கடுமையான வறுமையில் உள்ளனர். இங்கு ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 180 டாலர்கள், அதாவது சுமார் 15 ஆயிரம் ரூபாய். இங்கு, மூன்று பேரில் ஒருவர் வேலையில்லாமல், நாள் முழுவதும் உழைத்தாலும், தினமும், 50 ரூபாய் சம்பாதிக்க முடியாத நிலை உள்ளது. புருண்டியில் குழந்தை இறப்பு விகிதம் 1,000 குழந்தைகளுக்கு 87.8 இறப்புகள் ஆகும். இது உலகின் சராசரி குழந்தை இறப்பு விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகம். இங்கு மக்களுக்கு போதிய உணவு கூட கிடைப்பதில்லை. இங்கு கல்வியறிவு விகிதம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம்..
இதையும் படிங்க: உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் இவையே.. இந்தியாவின் நிலை என்ன தெரியுமா..?
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆட்சியின் கீழ் புருண்டி: உங்களுக்கு தெரியுமா.. புருண்டியும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. இந்த இரு நாடுகளும் புருண்டியின் கனிம வளங்களை அதிக அளவில் சுரண்டியுள்ளன. ஆனால், இந்த நாடு வேறொரு நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்தபோதும் கூட அவர்களின் நிலை மோசமாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இங்குள்ள இனக்கலவரம் புருண்டியை வறுமையில் பின்னோக்கி தள்ளியுள்ளது. இந்தப் போராட்டம் 1996ஆம் ஆண்டு தொடங்கி 2005ஆம் ஆண்டு வரை நீடித்தது. இதில் சுமார் இரண்டு லட்சம் பேர் இறந்தனர். இதனால் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகிவிட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D