அமர்நாத் கோஷ் யார்? அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்?

By SG Balan  |  First Published Mar 2, 2024, 1:55 PM IST

நான்கு நடனப் பாணிகளில் வல்லவரான அமர்நாத் கோஷ் சென்னையில் உள்ள கலாக்ஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். சர்வதேச கலாச்சார அமைச்சகத்திடமிருந்து குச்சிப்புடிக்கான தேசிய உதவித்தொகையைப் பெற்றவர்.


இந்திய நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது தோழியும் தொலைக்காட்சி நடிகையுமான தேவோலீனா பட்டாச்சார்ஜி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸ் சிட்டியில் மாலை வாக்கிங் மேற்கொண்டிருந்த அவர் பல முறை சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கூறிய தேவோலீனா இந்தியத் தூதரகத்திடமும் உதவி கோரினார்.

Tap to resize

Latest Videos

“என் நண்பர் அமர்நாத் கோஷ் செவ்வாய்கிழமை மாலை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் அகாடமியில் சுட்டுக் கொல்லப்பட்டார். குடும்பத்தில் ஒரே மகன் அவர். அவரது தாய் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். குற்றம் சாட்டப்பட்டவரின் விவரங்கள் அனைத்தும் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை” என்று அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் எழுதியுள்ளார்.

"அமெரிக்காவில் உள்ள சில நண்பர்கள் அவரது உடலைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் இன்னும் அதைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் முடிந்தால் உதவி செய்யக் கேட்டுக்கொள்கிறேன். குறைந்தபட்சம் அவரது கொலைக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அமர்நாத் கோஷ் யார்?

- அமர்நாத் கோஷ் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். தொழில்முறை பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக் கலைஞர். செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடனத்தில் MFA பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தார்.

- நான்கு நடனப் பாணிகளில் வல்லவரான அமர்நாத் கோஷ் சென்னையில் உள்ள கலாக்ஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். சர்வதேச கலாச்சார அமைச்சகத்திடமிருந்து குச்சிப்புடிக்கான தேசிய உதவித்தொகையைப் பெற்றவர்.

- போபிதா டே சர்க்கார், ஸ்ரீ எம்வி நரசிம்மாச்சாரி மற்றும் அடையார் கே லக்ஷ்மண் ஆகியோரிடம் நடனப் பயிற்சி பெற்றுள்ளார்.

click me!