நான் அதிகராத்திற்கு வந்தால் ராஜபக்ஷே கதை கந்தல்..!! அடித்து கூறும் பிரிட்டீஸ் எதிர்கட்சித் தலைவர்..!!

Published : Dec 12, 2019, 03:16 PM ISTUpdated : Dec 12, 2019, 03:17 PM IST
நான் அதிகராத்திற்கு வந்தால் ராஜபக்ஷே கதை கந்தல்..!!  அடித்து கூறும் பிரிட்டீஸ் எதிர்கட்சித் தலைவர்..!!

சுருக்கம்

இலங்கை தமிழ் மக்களுக்கு சுயாட்சி பெற்றுத் தருவதுடன்  இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரை தமிழினப்படுகொலை என பெயரிடுவேன் என தெரிவித்துள்ளார் . 

தான் அதிகாரத்துக்கு வந்தால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு சுயாட்சி பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என பிரிட்டிஷ் லேபர் கட்சியின் தலைவர் ஜெரம்  கோர்பின் கருத்து தெரிவித்துள்ளார் .  கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் .  லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி அயல்நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

 

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தவும் ,  இலங்கையில் தமிழர்களுக்கு சுய ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமெனவும்  ஈழத்தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கைவைத்து  வருகின்றனர்  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியாவின் லேபர் கட்சியின்  தலைவர் ஜெரம்  கோர்பின் தான் அதிகாரத்திற்கு வந்தால் ,

 

இலங்கை தமிழ் மக்களுக்கு சுயாட்சி பெற்றுத் தருவதுடன்  இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரை தமிழினப்படுகொலை என பெயரிடுவேன் என தெரிவித்துள்ளார் . இந்நிலையில் பிரித்தானியாவில்  உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைத்து அவர் இப்படி தெரிவித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன . 

அடிக்கடி தமிழ் அமைப்புகளும் புலம்பெயர் தமிழர்களும் ஜெரம் கோர்பினை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அவர் இவ்வாறு வாக்குறுதி அளித்திருப்பதும் தெரியவந்துள்ளது.   ஜெரம் கோர்பின் பிரதமராக தெரிவானால்,  இலங்கைக்கு நிச்சயம் ஆபத்தான நிலை ஏற்படும் எனவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லார்ட்  நெஸ்பி தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 

PREV
click me!

Recommended Stories

ஆஸி., கடற்கரையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்! 10 பேர் பரிதாப சாவு!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!