United Kingdom: போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யலைன்னா; ராணி எலிசபெத் பதவியை பறிப்பாரா?

By Dhanalakshmi G  |  First Published Jul 7, 2022, 3:35 PM IST

தனது அமைச்சரவை மற்றும் அலுவலகத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் என இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் ராஜினாமா செய்த பின்னரும் பிரதமர் பதவியில் நீடித்து வரும் போரிஸ் ஜான்சன் எந்த நேரத்திலும் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


தனது அமைச்சரவை மற்றும் அலுவலகத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் என இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் ராஜினாமா செய்த பின்னரும் பிரதமர் பதவியில் நீடித்து வரும் போரிஸ் ஜான்சன் எந்த நேரத்திலும் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமருக்கு நெருக்கமாக இருப்பவர்களே தற்போது ராஜினாமா செய்து வருவது போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. முன்னதாக நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவெத்   இருவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருந்தனர். இதைத் தொடர்ந்து மேலும் இருவர் ராஜினாமா செய்தனர்.

Latest Videos

undefined

இதையடுத்து நேற்று பார்லிமெண்டில் பேசி இருந்த போரிஸ் ஜான்சன், ''எப்போது அவசியம் ஏற்படுகிறதோ அப்போது ராஜினாமா செய்வேன்'' என்று தெரிவித்து இருந்தார்.

elon musk: shivon zilis: 9-வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்: அலுவலக சிஓவுடன் இரட்டை குழந்தை

இந்த நிலையில் புதிய நிதியமைச்சராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நதிம் ஜவாஹி, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் பென் வால்லேஸ் இருவரும் தற்போது போரிஸ் ஜான்சனை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

''பிரதமரே, உங்களது மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும் தற்போது என்ன செய்ய வேண்டும் என்று. அதை தற்போது செய்யுங்கள். நீங்கள் வெளியேறலாம்'' என்று நதிம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வால்லேஸ் தனது பதிவில், ''நாட்டை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது. அலுவலகத்தை காலியாக வைத்து இருக்க முடியாது. மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்த வேண்டும். தலைவரை மாற்றுவதற்கான வழிமுறைகள் கட்சியின் சட்ட  விதியில் உள்ளது. அதை நாம் பயன்படுத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Boris Johnson: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமாவா? அடுத்து என்ன நடக்கும்?

பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட கிரிஸ் பின்ஷர் என்பவரை பார்லிமென்ட் துணை கொறடாவாக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்தார். பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அவரை தேர்வு செய்ததால், அமைச்சர் பதவியை ரிஷி  சுனக், சஜித் ஜாவெத் இருவரும் ராஜினாமா செய்தனர். 

இந்த நிலையில் மேலும் பலர் ராஜினாமா செய்ய நெருக்கடி அதிகரித்த நிலையில் இன்று போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படியே போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தாலும், இன்னும் இரண்டு மாதங்களுக்கு அந்தப் பதவியில் நீடிப்பார் என்றும், கோடைக் காலத்தில்தான் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. 

sri lanka economic crisis: இலங்கையில் 60 லட்சம் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பில்லை: ஐ.நா. எச்சரிக்கை

இன்று இவரது ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கலாம். அதில் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்தால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி அவர் ராஜினாமா செய்யாவிட்டால், ராணி எலிசபெத் தலையிட்டு அவரை பதவியில் இருந்து நீக்கலாம். ஆனால், அதுபோன்ற செயலில் ராணி எலிசபெத் ஈடுபடுவதில்லை என்பது கடந்த கால வரலாறுகளில் இருந்து தெரிய வருகிறது. அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்பட பின்னர் முறைப்படி அவர் ராணியை சந்தித்து அமைச்சரவை அமைப்பதற்கு அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை இன்றும் உள்ளது.

click me!