அன்று பாகுபலி பல்வாள் தேவனுக்கு நடந்தது.. இன்று ராஜபக்ச தந்தைக்கு - போராட்டக்காரர்கள் செய்த சம்பவம் !

By Raghupati R  |  First Published May 11, 2022, 10:30 AM IST

Sri Lanka crisis : கொழும்பில் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு முதல் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளை எரித்து வருகின்றனர்.


இலங்கையில் வலுக்கும் வன்முறை பேராட்டங்களுக்கு மத்தியில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீட்டு வாயில்களை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆயுதம் ஏந்திய படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பிச்செல்லும் காட்சிகள் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளன. 

Latest Videos

undefined

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி காரணமாக பல வாரங்களாக நடைபெற்ற போராட்டங்களினால் மோசமான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மனித உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியேறும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய வீர்ரகள் வெளியேற்றியுள்ளனர். இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு ராஜபக்ச அரசே காரணம் என்று அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். 

இதன் காரணமாக ராஜபக்ச அரசுக்கு உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் வீதிகளில் போராட்டத்திலும் இறங்கினர். முதலில் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என ராஜபக்ச பிடிவாதம் பிடித்தார். இருப்பினும், இலங்கையில் நிலைமை மோசமடைந்ததால் நேற்றைய தினம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இருந்த போதிலும், அங்கு வன்முறை தொடர்ந்து வருகிறது. 

கொழும்பில் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு முதல் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளை எரித்து வருகின்றனர். ராஜபக்சே சகோதரர்களின் தந்தையின் நினைவு சின்னங்களை பொதுமக்கள் தகர்த்தனர்; அதேபோல் ராஜபக்சேக்களின் பூர்வீக வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. இன்று பசில் ராஜபக்சேவின் வீடு கொளுத்தப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டி.ஏ. ராஜபக்சேவின் முழு உருவ சிலை தகர்த்து எறியப்பட்டது. தங்காலையில் டி.ஏ.ராஜபக்சேவின் முழு உருவ சிலை கம்பீரமாக நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலையை போராட்டக் குழுவினர் இன்று தகர்த்து நடு வீதியில் வீசி எறிந்தனர். ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பம் மீதான சிங்கள மக்களின் கோபம் கட்டுக்கடங்காமல் இருப்பதையே இந்த சம்பவம் வெளிப்படுத்தி உள்ளது. பாகுபலி படத்தில் பல்வாள் தேவன் சிலையை உடைப்பது போல ராஜபக்சே சிலை உடைத்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : "இலங்கையில் பெண்களின் உதிரம் கொட்டப்படுகிறது..அந்த நாடு உருப்படாது.. அன்றே சொன்ன ரஜினிகாந்த் - வைரல் வீடியோ !

இதையும் படிங்க : கர்நாடகாவில் லூலூ மால் இருக்கு.. அண்ணாமலைக்கு இது தெரியுமா ? பங்கமாக கலாய்த்த கே.எஸ் அழகிரி

click me!