கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடியது. அடுத்தடுத்து கொரோனா உருமாற்றம் அடைந்து தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளதால் லேசான தொற்று பாதிப்பே உள்ளது. சிறந்த மருத்துவ பராமரிப்பை பெற்று நலமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.