Sri Lanka crisis ; இந்தியாவில் தஞ்சம் அடைந்ததா ராஜபக்சே குடும்பம்.! சமூக வலை தளங்களில் பரவும் தகவலால் பரபரப்பு

By Ajmal Khan  |  First Published May 11, 2022, 9:15 AM IST

Sri Lanka Economy Crisis; விவைவாசி உயர்வுக்கு எதிராக இலங்கை மக்கள் போராடி வரும் நிலையில், ராஜபக்சே குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சம் அடைந்ததாக வெளியான தகவலை இந்திய தூதரகம்  மறுத்துள்ளது


இலங்கையில் தொடரும் போராட்டம்

விலைவாசி உயர்வு, பொருளாதாரம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இலங்கை மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இலங்கை அரசியலில்  நெருக்கடி ஏற்பட்டதையடுத்து அரசிற்கு ஆதரவு கொடுத்து வந்த பல்வேறு கட்சிகள் வாபஸ் பெற்றுள்ளன. இதன் காரணமாக  ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே பதவி விலகினார். இதனையடுத்து இலங்கை நகரம் முழுவதும் ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், அரசிற்கு எதிராக  போராடி வருபவர்களுக்கும்  இடையே மோதல் ஏற்பட்டது. ராஜபக்சே மற்றும் அவரது மகன் வசித்து வந்த சொகுசு இல்லத்தை  வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். இதன் காரணமாக அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பொது சொத்தை சேதம் விளைவிப்பவர்களை கண்டதும் சுட அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

இந்தியாவில் ராஜபக்சே குடும்பம் தஞ்சமா

இந்த கலவரத்தின் மத்தியில் ராஜபக்சே தனது குடும்பத்தோடு வெளிநாட்டிற்கு தப்பிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. கடற்படையிடம் பாதுகாப்பு கேட்டு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் ராஜபக்சே குடும்பத்திற்கு இந்தியா தஞ்சம் கொடுத்துள்ளதாகவும், இலங்கை அரசின் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் இந்தியாவிற்கு வந்துவிட்டதாகவும் ஊடகங்களில் தகவல் பரவியது. இதனை இலங்கைக்கான இந்திய தூதரகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட இந்திய தூதரகம், இலங்கையை சேர்ந்த அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவிற்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவுவதாக தெரிவித்துள்ளது.

தகவலை மறுத்துள்ள இலங்கை 

இந்த தகவல் அனைத்தும் பொய்யானது என்றும் இதில் எந்தவித உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லையென கூறியுள்ளது. இது போன்ற தவறான தகவலை மறுப்பதாகவும் அந்த டுவிட்டர் பதிவில்  கூறியுள்ளது. இதனிடையே இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து  மே 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அதிபர் கோட்டாபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையில் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் அமைதி காக்கும் படி  இலங்கை அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

கட்டுக்கடங்காத கலவரம்... இலங்கை மக்களிடம் கெஞ்சும் கோட்டபய ராஜபக்சே!!

click me!