ஆஸ்திரேலியாவை சேர்ந்த 12 வயது சிறுமி தான் pixie. இந்த இளம் வயதிலேயே கோடீஸ்வரரான பல சிறுவர் சிறுமிகளில் இவரும் ஒருவர். தனது தாயுடன் இணைந்து ஒரு நிறுவனத்தின் தலைவராக இவர் பணியாற்றி வந்தார்.
Pixie Curtis.. இவர் ஆஸ்திரேலியா நாட்டில் பிறந்தவர், தற்போது 12 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர், pixie fidgets என்ற நிறுவனத்தை தனது தாயுடன் இணைந்து நடத்தி வருகிறார். இது குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
தாயுடன் இணைந்து தொழிலதிபரான Pixie அண்மையில் ஆஸ்திரேலியாவில் இருந்து படிப்புக்காக சிங்கப்பூர் குடியேறினார். ஒரு நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்த அவர் வெறும் 12 வயதில் பணி ஓய்வு பெற்று தற்பொழுது தனது முழு கவனத்தையும் படிப்பில் செலுத்துவதற்காக சிங்கப்பூர் வந்துள்ளார்.
சிங்கப்பூரில் தேசிய தின கோலாகலம்! கண்களுக்கு விருந்தளிக்கும் உணவுகள்!
அவர் அந்த நிறுவனத்தின் தலைவராக பணிபுரிந்து வந்த பொழுது அவருடைய மாதச் சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 11 கோடி என்று கூறப்படுகிறது. தற்பொழுது படிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து அவருடைய மொத்த குடும்பமும் சிங்கப்பூர் வந்துள்ள நிலையில் ஒரு பிரம்மாண்ட இடத்தை அவர்கள் வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி பிக்ஸியும் அவரது தம்பியும் சிங்கப்பூரில் இனி கல்வி கற்க உள்ளார்கள்.
இந்நிலையில் அவர் சிங்கப்பூர் வந்து இறங்கிய உடனேயே பிரபல ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவரால் அதை இயக்க முடியாது என்றாலும், அவருக்கு என்று சொந்தமாக ஒரு காரை அவர் வாங்கியுள்ளார்.
அந்த வண்டியை டெலிவரி எடுப்பதற்கு முன்பாக அந்த வண்டியை அவர் சோதித்துப் பார்க்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அந்த அதிநவீன ரேஞ்ச் ரோவர் காரின் விலை சுமார் 6 லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் என்று கூறப்படுகிறது, அதாவது இந்திய மதிப்பில் அது சுமார் 3 கோடியே 63 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியாக சமைத்து சாப்பிடலனா அவ்வளவு தான்.. கொடிய விஷமாக மாறக்கூடிய 5 உணவுகள் - மக்களே உஷார்!