பொதுவாக ஒரு மனிதன், அவர் செய்துவரும் வேலையில் இருந்து நீக்கப்படும்போது கோபமடைவது சகஜமான விஷயம் தான். ஆனால் சிங்கப்பூரில் ஒருவர், தான் வேலையை விட்டு நீக்கப்பட்டதை அடுத்து பலே வேலை ஒன்றை செய்து, தனது சக ஊழியர்களை கடுப்பாகியுள்ளார்.
தான் வேலை செய்துவந்து இடத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதால் கோபமடைந்த ஒரு சிங்கப்பூரர், தனது முன்னாள் சக ஊழியர்களை, அவர் வேலை பார்த்த அந்த நிறுவனத்திற்குள் வைத்து, வெளியே பூட்டியுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் வெளியேற வேறு வழியில்லாமல், அந்த சக ஊழியர்கள் 9 பேர் தவித்துபோய்யுள்ளனர்.
சிங்கப்பூரை சேர்ந்த விக்ட் லிம் சியோங் ஹாக் என்ற அந்த 52 வயது அனைவர், சிங்கையில் உள்ள ஒரு தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகவும், தளவாட உதவியாளராகவும் பணிபுரிந்து வந்தார். அந்த அலுவலகம் Pantech வணிக மையத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நிறுவனத்தில் குற்றவாளியான லிம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 1 முதல் பணி செய்து வருகின்றார். 2022 அன்று பணியைத் தொடங்கினார். ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி அவர் தனது தகுதிகாண் காலத்தை (probation period) முடிப்பதற்கு முன்பே, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்திய சீன எல்லையில் மேலும் ஏழு சுரங்கப்பாதைகள்; மத்திய அரசின் சூப்பர் பிளான்!!
தனது வேலை நிறுத்தப்பட்டதைக் கண்டு கோபமடைந்த லிம், கடையில் இருந்து ஒரு பூட்டை வாங்கியுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அன்று மதியம் சுமார் 2:20 மணியளவில், தனது முன்னாள் அலுவலகத்தின் நுழைவாயிலைப் பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
லிம் அந்த அலுவலகத்தை பூட்டும் பொழுது உள்ளே ஆட்கள் யாரும் இல்லை என்று தான் நினைத்ததாக விசாரணையில் கூறியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக சுமார் 9 பேர் அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அந்த அலுவலகத்திற்கு உள்ளே நுழைவதற்கும், வெளியே செல்வதற்கும் அந்த ஒரு வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 2.30 மணி அளவில் அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர் ஒருவர், கழிவறையை பயன்படுத்த செல்லலாம் என்று வந்த பொழுது, அதன் கதவு வெளியே பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள அலுவலகங்களில் பணிசெய்யும் தங்களது நண்பர்களை அழைத்து தங்களுக்கு உதவுமாறு கேட்ட பொழுது, அவர்களும் வந்து பார்த்து அந்த கதவு வெளியே பூட்டி இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இறுதியாக அந்த நிறுவனத்தின் முதலாளி சுமார் 80 சிங்கப்பூர் டாலர் செலவு செய்து அந்த பூட்டை திறந்துள்ளார். 80 சிங்கப்பூர் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5000 ரூபாய், இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் பிடிபட்ட லிங்க் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சுமார் 8 மாத காலத்திற்கு மேலாக நடந்து வந்த வழக்கில் தற்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே சக ஊழியர்களை வெறுப்பில் அலுவலகத்தில் வைத்து பூட்டியதற்காகவும், சில ஊழியர்களுக்கு வெறுப்பில் ஆபாச வார்த்தைகளால் திட்டி மெசேஜ் அனுப்பிய குற்றத்திற்காகவும், அவருக்கு 4000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பிடப்பட்டது. 4000 சிங்கப்பூர் டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.
லிம்மிற்கு வேலை போனது மட்டுமல்லாமல், அபராதமாக 4000 டாலர் விதிக்கப்பட்டது அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எமனாக மாறிய தலையில் மாட்டிய கிளிப்.. பெண்களே உஷார் - வீடியோ போட்டு விளக்கம் கொடுத்த பெண்!