ஒரு மனிதன் வாழ்வதற்கு இன்றியமையானதாக அமையும் பலவற்றுள் ஒன்றுதான் உணவு, அதிலும் குறிப்பாக பல்வேறு வகையான உணவுகளை, பலவிதமாக சமைத்து ருசித்து சாப்பிடுவதில் மனிதர்களாகிய நாம் பலநூறு ஆண்டுகளாக தேர்ச்சி பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து விதமான உணவுகளையும் உண்ணும் மனிதர்களாகிய நாம், குறிப்பாக சில உணவுகளை உண்ணும் பொழுது, அதை சரியாக சமைக்காமலோ, அல்லது அந்த உணவை நமது சாப்பாட்டில் சரியாக பயன்படுத்தவில்லை என்றாலோ அதுவே கொடிய விஷமாக மாறும் நிலை உள்ளது என்கிறார் அறிஞர்கள்.
Puffer மீன்கள்..
உலகில் உண்ணக்கூடிய, ஆனால் அதேசமயம் மிக மிக ஆபத்தான மீன் இனங்களில் ஒன்றுதான் இந்த Puffer மீன்கள். உலக அளவில் பல நாடுகளில் இது விருப்பமான உணவாக இல்லை என்றாலும், ஜப்பான் உள்ளிட்ட சில நாட்டு மக்கள் தங்களுடைய உணவில் இதை அதிகம் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் இதை அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களில், அங்கீகரிக்கப்பட்ட சமையல் நிபுணர்கள் மட்டுமே சமைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் நாட்டில் சில உணவகங்களில் இந்த வகை மீனைகளை உண்டு இறந்தவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த Puffer மீன்களை சமைக்கும் முன், அந்த மீன்களின் மூளை, தோல், கண்கள், குடல் மற்றும் கல்லீரல் உள்ளிட்டவற்றை அகற்றி விட்டு தான், பிறகு சமைக்கவே தொடங்குவார்கள்.அதேபோல வெட்டப்பட்ட எஞ்சிய பாகங்கள் கூட முறையாக அப்புறப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.
திருமண உறவில் தொடரும் சிக்கல்.. தம்பதிகள் பிரிவதற்கு முக்கிய காரணங்களே இவை தானாம்..
Casu marzu cheese..
உலகில் உள்ள பலநூறு வகையான சீஸ்களில் இதுவும் ஒன்று, சீஸ் என்பது தமிழில் பாலாடை கட்டிகள் என்று கூறுவார்கள். இந்த வகை சீஸ்களை இத்தாலி நாட்டில் உள்ள சதினியா என்ற நகரத்து மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது உடலுக்கு மாபெரும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக கூட மாற முடியுமாம், காரணம் இது புழுக்களை கொண்டு உருவாக்கப்படுகிற ஒரு வகை சீஸ்.
இந்த புழுக்களால் புரதத்தை எளிதில் செரித்துவிட முடியும், இந்த வகை சீஸ் செய்யும் பொழுது அந்த புழுக்கள் இறந்துவிடும் என்றாலும், ஒரு சில சமயங்களில் அவை இறக்காமல் நமது வயிற்றுக்குள் சென்று நம் குடலுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லது.
Rhubarb leaves..
இது லண்டன் நாட்டில், அனைவரும் தங்களுடைய சாலடுகளில் பயன்படுத்தும் ஒரு இலை, ஆனால் இது மனிதனின் உடலில் சில சமயங்களில் சில ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும் என்று கூறுகின்றனர். சரியாக சமைத்து உண்ணாத பட்சத்தில் குடல் சம்பந்தமான பிரச்சினைகளை இந்த இலைகள் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சிவப்பு நிற சோயா பீன்ஸ்..
சிவப்பு நிற சோயா பீன்ஸ், பார்ப்பதற்கு கிட்னி பீன்ஸ்களை போலவே இருக்கும், இதில் வைட்டமின்கள், மினரல்கள், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. ஆனால் ஆய்வுகளின் முடிவுப்படி, இதில் உள்ள ஒருவகை கொழுப்பு, மனிதனின் செரிமான மண்டலத்தை பெரிய அளவில் பாதிக்க கூடியது என்று கூறப்படுகிறது.
Nutmeg..
இது உலக அளவில் சில நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு விதை போன்ற மசாலா பொருள், ஆனால் மருத்துவர்கள், இதை அதிக அளவில் உட்கொள்வதால் மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்படும் என்றும் சில சுவாச சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறுகின்றனர்.