Italy shipwreck: இத்தாலி கடற்பகுதியில் படகு கவிழ்ந்து குறைந்து 59 அகதிகள் பலி

By SG Balan  |  First Published Feb 27, 2023, 11:07 AM IST

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுடன் இத்தாலியின் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் குறைந்தது 59 பேர் பலியாகியுள்ளனர்.


இத்தாலியின் கலாபிரியா கடற்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க அகதிகளுடன் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது. இதில் குறைந்து 59 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 12 பேர் குழந்தைகள். பலர் காணாமல் போயிருக்கிறார்கள். இத்தாலி கடலோர காவல் படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். இன்னும் பலரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை 80 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக இத்தாலியின் கடலோர காவல்படையினர் தெரிவிக்கின்றனர். படகு உடைந்தபோது அதில் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை என்று மீட்புப் பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசியபோது தெரிவித்துள்ளனர். சுமார் 150 பேர் படகில் இருந்தனர் என என்று உயிருடன் காப்பாற்றப்பட்டவர்கள் மூலம் தெரிகிறது. இன்னும் சுமார் 30 பேரை மீட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

Latest Videos

undefined

அதிகாலையில் மீண்டும், மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம்.! ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியாவில் மக்கள் அச்சம்

Shocking and sad news from Calabria, in Southern Italy: reports talk about several dead people, including children, after a migrant shipwreck.

Italian volunteers are responding.

No one should risk his/her life to find a safe place where to stay. pic.twitter.com/vZs4J3Iv3l

பல நாட்களுக்கு முன்பு துருக்கியில் இருந்து புறப்பட்ட படகில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இத்தாலிக்கு ஏராளமான மக்கள் அகதிகளாக வருகின்றனர்.

போர், பஞ்சம், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளை விட்டு வாழ்வாதாரம் தேடி புலம்பெயர்ந்து அகதிகளாக வேறு நாடுகளில் அடைக்கலம் தேடி வருகிறார்கள். தென் அமெரிக்க நாடுகளில் இருந்தும், ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் இருந்தும் அதிகமான மக்கள் வெளியேறுகின்றனர்.

Afghan migrants: பல்கேரியா வந்த கண்டெய்னரில் 18 ஆப்கன் அகதிகள் சடலமாக மீட்பு

click me!