Kailasa: ஐ.நா. கூட்டத்தில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பெண் பிரநிதிகள் பங்கேற்பு

By Pothy Raj  |  First Published Feb 25, 2023, 2:22 PM IST

ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

கர்நாடக மாநிலம், பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் நித்யானந்தா. பாலியல் குற்றங்களில் சிக்கியதையடுத்து, கர்நாடகாவில்இருந்து வெளிநாட்டுக்கு தப்பினார். 

Tap to resize

Latest Videos

இலங்கை உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு|அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்ததால் முடிவு

200 கோடி இந்துமக்களுக்கான குரலாக இருக்கப் போகிறோம் எனக் கூறிக்கொண்டு கைலாசா என்ற நாட்டையும் நித்யானந்தா உருவாக்கினார். அந்த நாட்டுக்கென தனிக்கொடி, நாணயம், காவல்துறை, வெளியுறவுத்துறை, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை வடிவமைத்து வெளியிட்டார்.

இது தவிர அவ்வப்போது வீடியோக்களி்ல் தோன்றியும் ஆன்மீக பிரசங்கங்களிலும், நித்யானந்தா ஈடுபட்டு வந்தார். பல்வேறு நாடுகளுடன் தூதரக உறவு, பொருளாதார உறவு வைத்துள்ளதாக கூறிவரும் நித்யானந்தா, அது தொடர்பான தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டார்.

அது மட்டுமல்லாமல் கைலாசா நாட்டை அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையும் அங்கீகரித்துள்ளதாகவும் அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 22 ம்தேதி ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சீன அதிபரைச் சந்திப்பேன்! புடினுடன் ‘நோ’:உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்

கைலாசா நாட்டின் சார்பில் விஜயபிரியா நித்யானந்தா, ஐநாவுக்கான நிரந்தரத்தூதர் முக்திகா ஆனந்தா, லாஸ்ஏஞ்செனல்ஸ் கைலாசாவின் தலைவர் சோனா காமத், செயின்ட் லூயிஸ் கைலாசாவின் தலைவர் நித்யா ஆத்மதயகி, பிரிட்டன் கைலாசாவின் தலைவர் நித்யா வெங்கடேஷானந்தா, பிரான்ஸ் கைலாசாவின் தலைவர் ஸ்லோவேனி,பிரியாபிரேமா நித்யானந்தா ஆகியோர் பங்கேற்றனர்.

கைலாசாவின் பெண் பிரதிநிதிகள் ஐநா கூட்டத்தில் பங்கேற்று, உலகில் பெண்களுக்கு  பாலியல் அடிப்படையிலான வேறுபாடுகள், துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதை புள்ளிவிவரங்களோடு குறிப்பிட்டனர்.

5 மண்டலங்களில் உள்ள 85 சதவீத பெண் எம்பிக்கள், உளவியல்ரீதியான வன்முறை, பாலியல் வன்முறைகள், மிரட்டல்கள் உள்ளிட்டவற்றை சந்தித்துள்ளனர். 44 சதவீதம்பேர், கொலைமிரட்டல், பாலியல் வன்முறை, தாக்குதல் உள்ளிட்டவற்றை குடும்பத்துக்குள்ளாகவே சந்தித்துள்ளனர் எனத் தெரிவித்தனர். ஆதலால் பெண்கள் உரிமைகளைக் காக்க  அவசரமாக நடவடிக்கள் எடுக்கவேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தினர்.

click me!