சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விரைவில் நான் சந்தித்துப் பேசுவேன், ஆனால் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுன் எந்தவிதமான சமரசப் பேச்சுக்கும் தயாரில்லை என்று உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விரைவில் நான் சந்தித்துப் பேசுவேன், ஆனால் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுன் எந்தவிதமான சமரசப் பேச்சுக்கும் தயாரில்லை என்று உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்
ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதிப் பேச்சு தொடங்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்திருந்தநிலையில் அவரை சந்திக்க உக்ரைன் அதிபர் செல்ல உள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. இதுவரை இருதரப்புக்கும் ஏராளமான பொருட்சேதம், உயிரிழப்புகள் நடந்துள்ளன. ஆனால் இருதரப்பும் அமைதிப்பேச்சை தொடங்கவில்லை.
அமெரிக்கர்களை ஜாம்பி-க்களாக மாற்றும் மருந்து| அழுகும் தசைகள்! ஜைலசின் என்றால் என்ன?
இதில் உக்ரைன் பக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ள நிலையில், கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின்பக்கம், சீனா தொடர்ந்து நிற்கிறது. ரஷ்யாவுக்கு எதிராக இதுவரை ஐ.நா.வில் கொண்டு வந்த எந்தத் தீர்மானத்தையும் சீனா ஆதரக்கவில்லை. அதேசமயம், ரஷ்யவான் போர் நடவடிக்கையையும் சீனா கண்டிக்கவில்லை.
ஆனால், உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் முடிவுக்குவர வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “ நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விரைவில் சந்தித்துப் பேசுவேன். ஆனால், ரஷ்ய அதிபருடன் எந்தவிதமான சமரசப் பேச்சுக்கும் தயாரக இல்லை. இந்த விவகாரத்தில் சீனா பங்கேற்றுள்ளது, முக்கியமான சமிக்கையாகத் தெரிகிறது. இருதரப்புக்கும் அமைதியைக் கொண்டுவர சீனா விரும்புகிறது.
இது ஒரு சமிக்கையாகவே பார்க்கிறேன், ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எனக்குத் தெரியாது. ரஷ்யாவுக்கு எந்தவிதத்திலும் சீன ஆயுதங்களை வழங்கி உதவக்கூடாது. வழங்காது என நம்புகிறேன். இது மிகவும் முக்கியமானது.
இது என்னுடைய முதல் பாயின்ட், ரஷ்ய அதிபர் புதினுடன் சமரசப் பேச்சுக்கே இடமில்லை. துருக்கி அதிபர் எர்டோகனிடம், போரைத் தொடங்கும் முன் ரஷ்ய அதிபரிடம் போரைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அந்த நேரத்தில் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. இப்போது அவர் முடியும் என்று நம்புகிறார். இப்போது அவரால் முடியாது” எனத் தெரிவித்தார்
ஐ.நா.வுக்கான சீன துணைத் தூதர் டாய் பிங் நேற்றுமுன்தினம் பேசுகையில் “ உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்குவது போரைத் தூண்டிவிடுமேத் தவிர அமைதியைக் கொண்டுவராது. மேற்கத்தியநாடுகள்,அமெரிக்கா ஆகியவை சேர்ந்து உக்ரைன், ரஷ்ய விவகாரத்தில் அமைதியைக் கொண்டுவர முயல வேண்டும்.ஆனால், ஆயுதங்களை வழங்கினால் அமைதி ஒருபோதும் வராது” எனத் தெரிவித்தார்