4 விண்கற்கள் இன்று நள்ளிரவு பூமியை கடப்பதால் ஆபத்து ஏற்படுமா: நாசா விஞ்ஞானிகள் கூறுவது என்ன..?

First Published Dec 21, 2016, 9:17 PM IST
Highlights


4 விண்கற்கள் இன்று நள்ளிரவு பூமியை கடப்பதால் ஆபத்து ஏற்படுமா: நாசா விஞ்ஞானிகள் கூறுவது என்ன..?

பூமிக்கு மிகவும் அருகாமையில் 4 விண்கற்கள் இன்று நள்ளிரவு கடக்கவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த விண்கற்கள் பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்து தாக்க வாய்ப்பு உள்ளது என்று கடந்த வாரம் நாசா விஞ்ஞானி கூறியிருந்தனர். இந்நிலையில் விண்கற்களின் வேகம் எதிர்பார்த்த அளிவிற்கு இல்லாத காரணத்தால் அவை பூமியில் மோதினாலும் மிகப்பெரிய சேதம் ஏற்படாது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இதுகுறித்து கூறும் போது சூரிய குடும்பத்தில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான விண்கற்கள் உள்ளன. இவற்றில் பூமியைத் தாக்கும் வாய்ப்புள்ளவை 10,000 விண்கற்கள். சில சமயங்களில் மிகப்பெரிய சேதங்களை இவை உண்டாகக்கூடும் என்று ஈ.எஸ்.ஏ.
(ESA) எனப்படும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகம் எச்சரித்துள்ளது.

அதேசமயத்தில் இன்றிரவு பூமியைக் கடக்கும் விண்கற்கள் பூமியிலிருந்து ஒன்றரை மில்லியன் மைல்கள் தொலைவில் தான் கடக்கும் என்று கணிக்கப்ப்பட்டுள்ளது. இவற்றில் 260 மீட்டர் விட்டம் கொண்ட விண்கல் ஒன்றும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

click me!