Viral video: ஜெனிவாவில் இந்தியர்களுக்கு எதிராக எதிர்ப்பு பிரச்சாரம்.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ !

By Raghupati R  |  First Published Mar 4, 2023, 5:55 PM IST

உலக அளவில் இந்தியாவை இழிவுபடுத்த சதியா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது  ஜெனிவாவில் இருந்து வந்த இந்திய மாணவர் ஒருவரின் வீடியோ. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.


சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஜெனிவாவில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த வீடியோவை இந்திய மாணவர் ஒருவர் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

Megh Updates என்ற ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  உண்மையில் இது ஜெனிவாவில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ தான் என்று தெரியவந்துள்ளது.

A video shot by an Indian student in Geneva goes viral where a high level of propaganda can be seen unleashed against India near UNHRC HQ.

Is this the new Toolkit or planned preparation for 2024 ?? pic.twitter.com/irNPkiHvY2

— Megh Updates 🚨™ (@MeghUpdates)

Latest Videos

undefined

இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்யும் விஷயத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த வீடியோ ஜெனிவாவில் படிக்கும் மாணவர் ஒருவரால் எடுக்கப்பட்டது. இதில் பல வகையான பேனர்கள் உள்ளன. இதில் இந்திய பெண்களை வேலையாட்களாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம் பற்றிய சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் உள்ள அனைத்து போஸ்டர்களும் இந்தியாவுக்கு எதிரானவை என்று அர்த்தம் கொடுக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்

click me!