United Kailasa: சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு அங்கீகாரமா? ஐ.நா. விளக்கம்

By Pothy RajFirst Published Mar 3, 2023, 1:19 PM IST
Highlights

சாமியார் நித்யானந்தாவால் நிறுவப்பட்ட யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா சார்பில் பங்கேற்றவர்கள் பேசியது, பொருத்தமற்றது, அவர்களின் கருத்துக்களை ஐ.நா. அங்கீகரிக்கவில்லை.

சாமியார் நித்யானந்தாவால் நிறுவப்பட்ட யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா சார்பில் பங்கேற்றவர்கள் பேசியது, பொருத்தமற்றது, அவர்களின் கருத்துக்களை ஐ.நா. அங்கீகரிக்கவில்லை.

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா பாலியல் குற்றச்சாட்டால் போலீஸாரால் தேடப்பட்டு வந்தார். இந்தியாவிலிருந்து தப்பி ஓடிய நித்யானந்தா, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கிருந்தபடியே வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி ஜெனிவாவில் ஐ.நா.வின் பொருளாதார, கலாச்சார உரிமைகள் குழுக் கூட்டம் நடந்தது. இதில் கைலாசா நாட்டின் சார்பில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ஐ.நா.வில் கைலாசா நாட்டை அங்கீகரி்த்துவிட்டனர் என்று தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் நித்யானந்தா மீது பல்வேறு இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி அவரை நாட்டை விட்டு துரத்திவிட்டனர் என்று பெண் பிரதிநிதிகள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் நித்யானந்தாவின் யுனைடெட் ஆப் கைலாசா நாட்டை ஐ.நா. அங்கீகரித்துவிட்டதா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்தது. இதற்கு ஐ.நா. மனி உரிமைகள் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

ஐ.நா. கூட்டத்தில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பெண் பிரநிதிகள் பங்கேற்பு

யுனைடெட் ஆப் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றது அனைவருக்கும் தெரியும். அவர்கள் தங்களை விளம்படுத்தும் நோக்கில் பிரசுரங்களை தருவதற்கு தடை செய்யப்பட்டனர், அவர்களின் பேச்சு எந்தவித பரிசீலனைக்கும் ஏற்கப்படாது.

ஐ.நா.வின் கலாச்சாரம், பொருளாதாரம் சார்ந்த கூட்டங்களுக்கு பதிவு செய்து யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், எந்ததொண்டு நிறுவனமும் பங்கேற்கலாம். இதற்குத் தடையில்லை. நம்பகத்தன்மையான தகவல்களை எந்த அமைப்பினரும் இந்தக் கூட்டத்தில் தாக்கல் செய்யலாம்.

கடந்த மாதம் 24ம் தேதி நடந்த ஐ.நா. பொதுக்கூட்டம் அனைவருக்குமானது. இதில் கைலாசாவின் பிரதிநிதிகள் சுருக்கமாகவே பேசினர். அவர்களின் பேச்சும் பொருத்தமற்றது, அதை பரீசிலனைக்கும் எடுக்கமாட்டோம்.” எனத் தெரிவித்தார்

கர்நாடக பாஜக எம்எல்ஏ மகன் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லோக்ஆயுக்தா அதிகாரிகளால் கைது

பொதுவாக ஐ.நா.வில் ஒரு நாடு இடம்ப பெற ஐ.நா. பொதுக்கவுன்சில் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், ஜெனிவாவில் செயல்படும் ஐ.நா. மனிதஉரிமைகள் அமைப்பில் பொதுஅமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் என யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்திரப்பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி கூறுகையில் “ ஐ.நா.வின் நடைமுறைகளை அவமானப்படுத்தும் செயல்.  சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்த ஒருவர் நடத்தும் அமைப்பின் பிரதிநிதிகள் ஐநாவில் தாங்கள் தொண்டுநிறுவனம் என்றோ அல்லது வேறுவிதமாகவோ அழைத்துக்கொள்வது ஐநா நடைமுறைகளை முற்றிலும் தவறாகப் பயன்படுத்துவதாகும். நம்பகமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்வதற்கான வலுவான செயல்முறைக்கு இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.” எனத் தெரிவித்தார்

click me!