Shiva Seal: பாகிஸ்தானில் கிடைத்த 1700 வருட பழமையான சிவன் முத்திரை! ஸ்கந்த புராணத்துடன் தொடர்பு!

Published : Aug 12, 2026, 02:30 PM IST
Shiva Seal

சுருக்கம்

பாகிஸ்தானில் சுமார் 1500-1700 ஆண்டுகள் பழமையான முத்திரை ஒன்றை இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது. பிராமி எழுத்துக்களுடன் உள்ள இந்த முத்திரை, தேவதாரு காட்டில் இருந்த சுவாமி கோட்டேஷ்வரர் என்ற சிவன் கோயிலுக்கு சொந்தமானது என்றும், இது ஸ்கந்த புராணக் கதையுடன் தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது.

வரலாற்றின் பக்கங்களில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் அவ்வப்போது வெளிவந்து நம்மை ஆச்சரியப்படுத்தும். அப்படி ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பை இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India - ASI) நிகழ்த்தியுள்ளது. அதன் கல்வெட்டியல் பிரிவு, அண்டை நாடான பாகிஸ்தானில் சுமார் 1500-1700 ஆண்டுகள் பழமையான ஒரு முத்திரையைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த முத்திரையில் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் இது ஒரு கோயில் தொடர்பான முத்திரை என்பது தெரியவந்துள்ளது. இந்த முத்திரை, இமயமலையில் உள்ள தேவதாரு மரங்கள் நிறைந்த 'தேவதருவன்' என்ற காட்டில் இருந்த 'சுவாமி கோட்டேஷ்வரர்' என்ற சிவன் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ASI கல்வெட்டியல் பிரிவின் தலைவர் கே. முனிரத்னம் ரெட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்.. இந்த 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்!

ஸ்கந்த புராணத்துடன் தொடர்பு

இந்த முத்திரை, ஸ்கந்த புராணத்தில் வரும் ஒரு கதையுடன் ஒப்பிடப்படுகிறது. தேவதருவன் காட்டில் சிவன் பயணம் செய்ததை இந்த முத்திரை குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், இதுவே அந்தப் புராணக் கதைக்கான மிகப் பழமையான எழுத்து மற்றும் சித்திரப்பூர்வமான சான்றாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, 2024-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் அருகே 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அந்த கல்வெட்டில், புஷ்பசிங் என்ற நபர் தனது குருவின் நினைவு நாளில் ஒரு மகேஷ்வரலிங்கத்தை நிறுவியதாக அதிகாரி முனிரத்னம் ரெட்டி குறிப்பிடுகிறார். ஆனால், அந்த குருவின் பெயர் தெளிவாக இல்லை.

பெஷாவரில் 10 ஆம் நூற்றாண்டு சாரதா எழுத்துக்கள்

கில்கிட் கல்வெட்டு கண்டுபிடிக்கப்படுவதற்கு சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு, பெஷாவர் அருகே உள்ள பாறைகளில் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாரதா எழுத்துக்களில் எழுதப்பட்ட சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. அந்த கல்வெட்டில் பௌத்த தாரணி மந்திரங்கள் பற்றிய குறிப்புகள் இருந்தன. அதன் ஆறாவது வரியில் "த தா ரி நி" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. இது அந்தப் பகுதியில் பல்வேறு மதங்களும், பாரம்பரியங்களும் இருந்ததையும், அங்கு வளமான கலாச்சார வாழ்க்கை நிலவியதையும் தெளிவாகக் காட்டியது.

இதையும் படிங்க: கடல் மீன் vs ஆற்று மீன்: எதில் சத்துக்கள் அதிகம்? உடம்புக்கு எது நல்லது? ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம்!

முத்திரையின் அமைப்பு மற்றும் சித்திரம்

இந்த சுடுமண் முத்திரையின் மேல் பகுதியில் சிவனின் வாகனமான நந்தி (காளை) மற்றும் திரிசூலம் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. அதற்குப் கீழ்தான் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

தேவதரு வனத்தின் புவியியல் பின்னணி

புராணங்களில் கூறப்படும் 'தேவதருவனம்' என்பது தற்போதைய காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவை அடங்கிய இமயமலைப் பகுதியைக் குறிக்கிறது. இங்குள்ள அடர்ந்த தேவதாரு காடுகளில் சிவபெருமான் தாருகாவன முனிவர்களின் அறியாமையைப் போக்க 'பிட்சாடனராக' (பிச்சாடனர் அவதாரம்) உலா வந்ததாகக் கூறப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

USA Travel Tips: அமெரிக்கா போறீங்களா? இந்தியர்களே இந்த 15 விஷயங்களை மறக்காதீங்க!
Freshwater Resources: உலகில் அதிக நன்னீர் வளம் கொண்ட நாடு எது? டாப் 10-ல் இந்தியாவுக்கு என்ன இடம்?