India Oil Imports: உலக எண்ணெய் வர்த்தகத்தின் இதயம் மீண்டும் முடக்கம்.. இந்தியாவுக்கும் தாக்கம் இருக்குமா?

Published : Jul 13, 2026, 02:53 PM IST
Hormuz

சுருக்கம்

India Oil Imports: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ளது, இரு தரப்பும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளன. உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றத்தால், சர்வதேச எண்ணெய் விலைகள் உயர்ந்து, உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

மீண்டும் தீவிரமான அமெரிக்கா, ஈரான் மோதல்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த பதற்றம் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை பரிமாறிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதல், சமீபத்திய அமைதி முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

ஹார்முஸ் ஜலசந்தி ஏன் முக்கியம்?

உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான ஹார்மஸ் ஜலசந்தி வழியாக உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு நடைபெறுகிறது. ஈரான் இந்த ஜலசந்தியை மீண்டும் மூடியதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்கா கடல்சார் வர்த்தக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் எப்படி தீவிரமானது?

சர்வதேச தகவல்களின்படி, இந்திய பணியாளர்கள் இருந்த கண்டெய்னர் கப்பல் மீது ஈரான் எச்சரிக்கைத் தாக்குதல் நடத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரானின் பல ராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் பல நாடுகளை நோக்கி ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக பொருளாதாரத்துக்கு என்ன தாக்கம்?

இந்த மோதலின் உடனடி தாக்கமாக சர்வதேச எண்ணெய் விலைகள் உயரத் தொடங்கியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைந்துள்ளது, இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சந்தை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவுக்கு என்ன விளைவு?

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி செய்கிறது. எனவே ஹார்மஸ் ஜலசந்தியில் நீடிக்கும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தால், பெட்ரோல், டீசல் விலைகள் மற்றும் போக்குவரத்து செலவுகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில், பல நாடுகள் அமெரிக்கா மற்றும் ஈரான் இரண்டும் பதற்றத்தைத் தணித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

USA Salaries: அமெரிக்காவில் குப்பை அள்ளும் வேலைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
Money Tree : பணம் காய்க்கும் மரம் உண்மையிலேயே இருக்கு! எங்க இருக்கு தெரியுமா?