அமெரிக்காவில் திக் திக்... அதிபருக்கு நேர்ந்த ஆபத்து..!! சதி வழக்கில் பதவியை இழக்கிறார் ட்ரம்ப்..??

Published : Dec 19, 2019, 01:53 PM IST
அமெரிக்காவில் திக் திக்... அதிபருக்கு நேர்ந்த ஆபத்து..!!  சதி வழக்கில் பதவியை இழக்கிறார் ட்ரம்ப்..??

சுருக்கம்

மற்றும் செனட் சபை இரண்டிலும் அவருக்கு எதிரான தீர்மானம்  வெற்றி பெற்றால் அவர்  பதவியில் இழக்க நேரிடும்.   

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு  எதிரான பதவி நீக்க தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது . சர்வதேச அளவில்  வல்லமை பொருந்திய நாடுகளுக்கெல்லாம் தலையாக  இருந்து வருகிறது அமெரிக்கா . அப்படிப்பட்ட அமெரிக்காவின் அதிபராக இருந்து வருகிறார் அதிபர் ட்ரம்ப்.   உலகிலேயே மிக அதிகாரம் வாய்ந்த  பதவிகளில் ஒன்றாக கருதப்படும் அமெரிக்க அதிபர்  பதவிக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது . 

அதாவது,  அதிகார துஷ்பிரயோகம் செய்ததார்,  சதி திட்டம் தீட்டினார்,   பிரிட்டனுக்கு எதிராக உக்ரைன் அதிபரிடம் சதி  செய்ய பேரம் பேசினார் என அதிபர் ட்ரம்ப்பின் மீது எழும் புகார்கள் ஏராளமாக உள்ளது.  இக்குற்றச்சாட்டுகளின்  அடிப்படையில் அதிபர் ட்ரம்பை அதிபர் பதிவியில் இருந்து   தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும்  கோரிக்கைகள் எழுந்தது  .  ட்ரம்ப்பின்  சூழ்ச்சித் திட்டங்கள் மூலம் அரசியலமைப்பு சட்டம் ,  தேசிய பாதுகாப்பு ,  மற்றும் அதிபர் பதவிக்கான  நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றிக்கு அவர் ஆபத்து ஏற்படுத்திவிட்டார்  என்று எதிர்க்கட்சிகள் ட்ரம் மீது குற்றம் சாட்டி வருகின்றன .  குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ட்ரம்புக்கு  எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது . இந்நிலையில்  அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ,  மற்றும் செனட் சபை இரண்டிலும் அவருக்கு எதிரான தீர்மானம்  வெற்றி பெற்றால் அவர்  பதவியில் இழக்க நேரிடும். 

சுமார் 435 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில் இறுதி வாக்கெடுப்பில்  229 - 198 என்ற எண்ணிக்கையில் வாக்கு பதிவாகி உள்ளது,  தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் ,  காங்கிரஸை தடுத்ததாகவும் பெரும்பான்மை பிரதிநிதிகள் சபை அறிவித்துள்ளது .  அதிகார துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டுக்கு  உள்ளாகியுள்ளார் ட்ரம்பு.  அவர்  தொடர்பான  இரண்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அவரை பதவியிலிருந்து இறக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க அது செனட் சபைக்கு   அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில்  செனட்டில் அவருக்கு எதிரான தீர்மானத்தை  நிறைவேற்றினால் அவர்  பதவி பறிபோகும் அபாயம் அவருக்கு  ஏற்பட்டுள்ளது .  இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதிபர் ட்ரம்ப்  அதிபரை பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்திருப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அவர் விமர்சித்துள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!