ஆனால் எதிர்வரும் அதிபர் தேர்தலில் நான் தோற்க வேண்டும் என சீனா விரும்புகிறது , என்னை தோற்கடிக்க அது என்ன வேண்டுமானாலும் செய்யும் என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என சீனா விரும்புகிறது .
எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் தோற்க வேண்டும் என சீனா விரும்புகிறது என்னை வீழ்த்த அது எதை வேண்டுமானாலும் செய்யும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார் . இந்நிலையில் அவரது பேச்சு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . இதுவரையில் உலகளவில் 30. 23 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . சுமார் 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர் , இதுவரையில் 10 லட்சம் பேர் இந்த வைரஸில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது . அந்நாட்டில் சுமார் 10 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரை 61 ஆயிரத்து 669 பேர் உயிரிழந்துள்ளனர் .
இந்நிலையில் இந்த வைரசுக்கு சீனா தான் காரணம் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார் , அதுமட்டுமின்றி முன்கூட்டியே சீனா இந்த வைரஸ் குறித்து எச்சரித்திருந்தால் உலகில் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது , எனவே உலகத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கும் பொருளாதார இழப்புகளுக்கும் சீனாதான் காரணம் என ஒட்டுமொத்த பழியையும் சீனா மீது சுமத்தி இருக்கிறார் ட்ரம்ப், அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இழப்புக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார் . சீனாவுக்கும் இந்த வைரசுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அவர் அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும் எதிர்க்காத அளவிற்கு சீனாவை மிகக் கடுமையாக நான் எதிர்த்து வருகிறேன் , இன்னும் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது.
ஆனால் எதிர்வரும் அதிபர் தேர்தலில் நான் தோற்க வேண்டும் என சீனா விரும்புகிறது , என்னை தோற்கடிக்க அது என்ன வேண்டுமானாலும் செய்யும் என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என சீனா விரும்புகிறது . கொரோனா தொற்று பரவலை சீனா கையாண்ட விதமே அதற்கு சாட்சி .சீனா மீது வர்த்தக போரை தொடுத்தால் அது என்னை தோற்கடிக்கும் வேலைகளில் இறங்கும் என அவர் தெரிவித்துள்ளார் . ட்ரம்ப்பின் இந்த பேச்சு அமெரிக்க அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அவரின் இப்பேச்சு குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அரசியல் நோக்ககர்கள், கொரோனாவால் சிக்கி மக்கள் சொல்லெணாத் துயரத்தை அனுபவித்து வரும் நிலையில் அவர்களை பற்றி கவலைப்படாமல் ட்ரம்ப் அதிபர் பதவிக்காக கவலைப்படுகிறார் என விமர்சித்துள்ளனர் . ஏற்கனவே ஜோ பிடன் சீனாவுடன் நட்பு பாராட்டுபவர் என முன்பொரு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .