ஆசிய கண்டத்தின் உண்மையான நோயாளி நாடு எது தெரியுமா..!! எகிறி அடிக்க பாய்ந்த அமெரிக்கா...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 26, 2020, 2:10 PM IST
Highlights

அதில் ஆசியாவின் உண்மையான நோயாளியை சீனா என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை இடம் பெற்றிருந்தது .  அதேபோல் கொரோனாவை கட்டுப்படுத்த சீனா சரிவர செயல்படவில்லை என அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப்பட்டுள்ளது . 

ஆசிய கண்டத்தின் உண்மையான  நோயாளி சீனா என்ற தலைப்பில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகையில் செய்தி வெளியிட்ட நிருபர்கள் இருவர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் .  சீனா குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்ததாகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் அதன் செய்தியாளர்கள் மீது சீடா குற்றஞ்சாட்டியுள்ளது.  இது ஊடகத்தின் கழுத்தை நெரிக்கும் செயல் என சர்வதேச ஊடகங்கள் சீனாவை கண்டித்துள்ளன .   சீனாவில் ஒரு ஹூபெய்  மாகாணம் வுகான்  நகரில் பரவிய கொரோனா  வைரஸ் சீனாவையும்  தாண்டி ஆஸ்திரேலியா இத்தாலி ஈரான் மலேசியா அமெரிக்கா சிங்கப்பூர் தென்கொரியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட  நாடுகளிலும் பரவி உள்ளது . 

இதுவரையில் சினாவில் இந்த வைரசுக்கு  சுமார் 2,663 பேர் உயிரிழந்துள்ளனர் , சுமார் 73 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் சீனா போராடி வருகிறது ,  இந்நிலையில்  பத்திரிகை மற்றும் ஊடகங்கள் கொரோனா  குறித்து செய்தி வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது .  இதற்கிடையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு சீனாவில் செயல்பட்டு வரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை தனது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டது ,  அதில் ஆசியாவின் உண்மையான நோயாளியை சீனா என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை இடம் பெற்றிருந்தது .அதேபோல் கொரோனாவை  கட்டுப்படுத்த சீனா சரிவர செயல்படவில்லை என அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப்பட்டுள்ளது . 

அதாவது சீனா குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இந்த பத்திரிக்கை செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது இக்கட்டுரையை அமெரிக்காவை சேர்ந்த ஆசிரியர் வால்டர்  ருசல் மேட் எழுதியிருந்தார் ,  இக்கட்டுரையால் மிகுந்த  கோபமடைந்த சீன அரசு வால் ஸ்ட்ரீட் ஜர்னல்  கட்டுரையை வெளியிட்ட துணை தலைமைச் செய்தி ஆசிரியரான அமெரிக்காவைச் சேர்ந்த   ஜோஸ்சின்,   மற்றும் செய்தியாளர்  சோ டேங்க் ஆடியோ ஆகியோர் உடனடியாக வெளியேற வேண்டும் என சீனா உத்தரவிட்டது , அவர்களும் உத்தரவே கேட்டு வெளியேறியுள்ளனர்.  வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையாளர்கள் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் சீன பத்திரிகைகள் செய்தி நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது  குறிப்பிடத்தக்கது .

 

 

click me!