அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்திற்கு சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, நடு வானில் பறந்துகொண்டிருந்த நிலையில் சுமார் மூன்று நிமிடங்களில் 15,000 அடிக்கு மேல் சட்டென்று கீழே இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல அமெரிக்கா நாளேடு அளித்த அறிக்கையின்படி, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 5916 அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள சார்லோட்டிலிருந்து, புளோரிடாவின் கெய்னெஸ்வில்லிக்கு சென்றுள்ளது. விமானம் புறப்பட்டு சுமார் 45 நிமிடம் ஆனா நிலையில் நடுவானில் விமானம் சென்றபோது, விமானத்தில் அழுத்தம் சம்மந்தமான பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் பயணித்தவரும், புளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஹாரிசன் ஹோவ் சமூக ஊடகங்களில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை விவரித்துள்ளார். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த பொது, சட்டென்று அந்த விமானம் பல ஆயிரம் அடிகள் சில நிமிடங்களில் கீழே இறங்கியது. இருக்கையின் மேலே இருந் ஆக்சிஜென் மாஸ்குகள் கீழே இறக்கப்பட்டன.
undefined
நீண்ட கால கோவிட் நோயாளியின் கால்கள் நீல நிறமாக மாறியது.. அதுவும் வெறும் 10 நிமிடங்களிலேயே..
எதோ எரிவதை போல ஒரு நாற்றத்தை பயணிகள் அனைவராலும் நன்றாக உணர முடிந்தது, அப்போது எழும்பிய பலத்த சத்தம், பலருக்கு மரண பயத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த விமானத்தின் பைலட்களுக்கும், கேபின் ஊழியர்களுக்கும் தான் நன்றி தெரிவிக்கவேண்டும். அவர்கள் விரைவாக தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தனர் என்றார் அவர்.
FlightAware நிறுவனம் பகிர்ந்த தரவுகளின்படி, பயணம் தொடங்கிய 43 நிமிடங்களுக்குப் பிறகு விமானம் 6 நிமிடங்களுக்குள் 18,600 அடி கீழே இறங்கியது என்றும், 11 நிமிடங்களில் கிட்டத்தட்ட 20,000 அடி கீழே விழுந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக விமானங்கள் வானத்தில் பயணிக்கும்பொது Turbulence என்ற ஒரு வகை காற்றழுத்ததில் சிக்குவது இயல்பானது தான்.
ஆனால் இத்தனை ஆயிரம் அடிகள் விமானம் சட்டென்று விழும்போது அது அனைவருக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை, இறுதியாக அந்த விமானம், விமானிகளின் சாதுர்யத்தால் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.