முதலையை பிடிக்க முயன்ற நபரை முதலை ஆக்ரோசமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலையை பிடிக்க முயன்ற நபரை முதலை ஆக்ரோசமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வேகமான மற்றும் மூர்க்கமான ஊர்வனவற்றில் ஒன்று முதலை. அவை பலமான தாடைகளால் இறையை கடித்து விழுங்கும். முதலையிடம் சிக்கினால் தப்புவது என்பது மிகக்கடினம். இந்த நிலையில் முதலையை பிடிக்க முயன்ற நபரை அந்த முதலை வேகமாக கீழே தள்ளி கடிக்க முயன்றது.
இதையும் படிங்க: சீனாவின் பாக்ஸ்கான் ஆலையில் ஊழியர்கள் காவலர்களுக்கு இடையே மோதல்; போர்க்களமான காட்சிகளுடன் வைரலான வீடியோ!!
அந்த நபர் நூலிழையில் அந்த முதலையிடம் இருந்து உயிர் தப்பினார். இதுக்குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் சட்டை போன்ற எளிய துணியால் முதலையை பிடிக்க முயல்கிறார். அப்போது அந்த முதலை அந்த நபரை தாக்குவதை காணலாம். முதியவரின் கை முதலையின் வாயில் சிக்கியது.
இதையும் படிங்க: இலங்கைப் பொருளாதாரச் சீர்குலைவுக்கு ‘அந்நிய சக்திகளே’ காரணம்: மகிந்தா ராஜபக்சே குற்றச்சாட்டு
சட்டை கடித்த முதலை வாயை திறக்கும் போது சுதாரித்துக்கொண்ட நபர் அங்கிருந்து பின்வாங்கி காயமின்றி தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். தகுந்த பயிற்சி மற்றும் ஆதரவு இல்லாமல் வன விலங்குகளுடன் பழகுவது நல்லதல்ல என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மேலும் இந்த வீடியோ பலரால் பார்க்கப்பட்டு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.