அல்கய்தாவை சின்னாபின்னமாக்கிய அமெரிக்கா...!! சுலைமானி போல போட்டுத்தள்ளப்பட்ட தீவிரவாதி அல் ரெமி...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 8, 2020, 12:07 PM IST
Highlights

இந்நிலையில் அமெரிக்க படைகளால் ரெமியை தேடப்பட்டு  வந்த நிலையில் தனது உத்தரவின்பேரில் அல் ரமி  சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார் 
 

ஈரான் தளபதி சுலைமானியைத் தொடர்ந்து ,  அல்கய்தாவின் துணைத் தலைவரை அமெரிக்க ராணுவம்  படுகொலை செய்துள்ளது. அமெரிக்கப் படை ஏமனில் நடத்திய தாக்குதலில் அல்கய்தா  தீவிரவாத அமைப்பின் துணைத்தலைவர் காசிம் அல் ரெமி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் .   அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒசாமா பின்லேடன் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக்க செயல்பட்டு வந்தார் அய்மன் அல் ஜவாஹிரி  , இவருடன் துணைத் தளபதியாக இருந்து வந்தவர்  அல் ரெமி  ,46 வயதாகும் இவர் கடந்த 1990ஆம் ஆண்டில் அல்கைதா அமைப்பில்  சேர்ந்து பின்லேடன் உடன் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியவர் ஆவார் .

பின் லேடனுக்கு பின்னர் ,  ஏமனுக்கு சென்று தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த இவரின்  தலைக்கு அமெரிக்கா சுமார் 75 கோடி ரூபாய் தொகை அறிவித்திருந்தது இந்நிலையில் ,  கடந்த டிசம்பர் 6ஆம்  தேதி,   அமெரிக்க கடற்படை விமான தளத்தில் ராணுவ பயிற்சிக்காக வந்த சவுதி விமானப்படை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ,  அமெரிக்க கடற்படை மாலுமிகள் மூன்று பேர் பலியாயினர் . இதனையடுத்து பயிற்சிக்கு வந்த சவுதி ராணுவத்தினர் 21 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் இந்நிலையில்  இத்தாக்குதலுக்கு அல்கய்தா அமைப்பு தான் காரணம் என  அல் ரெமி  வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.  இந்நிலையில் அமெரிக்க படைகளால் ரெமியை தேடப்பட்டு  வந்த நிலையில் தனது உத்தரவின்பேரில் அல் ரமி  சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார் 

 

இதுகுறித்து பேட்டி அளித்த அவர் ,  ஒசாமா பின்லேடனுக்கு பின்னர் அந்த இயக்கத்தின் முக்கிய புள்ளியாக இருந்த அல்-ரெமி படுகொலை அல்கொய்தாவை மேலும் முடக்கும் என்றார்,   சமீபத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்றாவது முக்கிய நபர் அல்ரெமி ஆவார் கடந்த அக்டோபர் மாதம் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல்பாக்தாதி அமெரிக்க படையால் கொள்ளப்பட்ட நிலையில் ,  தீவிரவாதத்தை  தூண்டியதாக ஈரான் நாட்டில் புரட்சி படை தளபதி காசியில் சுலைமானி அமெரிக்க விமானப்படை யால் கொல்லப்பட்டார் இந்நிலையில் அல்ரெமி கொலை  குறிப்பிடத்தக்கது.
 

click me!