கோர தாண்டவமாடும் கொரோனா..! 772 உயிரை பறித்தது..!

Published : Feb 08, 2020, 10:18 AM ISTUpdated : Feb 08, 2020, 10:21 AM IST
கோர தாண்டவமாடும் கொரோனா..! 772 உயிரை பறித்தது..!

சுருக்கம்

கொரோனா பாதிப்பு குறித்து முதன்முதலில் எச்சரிக்கை விடுத்த சீன மருத்துவர் லீ வென்லியாங் அதே நோயால் பாதிக்கப்பட்டு தற்போது உயிரிழந்துள்ளார். அது அந்நாட்டு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து தற்போது 772 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 34,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கருதப்படும் உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் பல மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அந்நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகள் அனைத்திலும் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்னர்.

சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவுவதை தடுக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரையிலும் சுமார் 1,540 பேர் நோய் தோற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கொரோனா பாதிப்பு குறித்து முதன்முதலில் எச்சரிக்கை விடுத்த சீன மருத்துவர் லீ வென்லியாங் அதே நோயால் பாதிக்கப்பட்டு தற்போது உயிரிழந்துள்ளார். அது அந்நாட்டு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

கார் ஓட்டுநர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு கதறி அழுத சீமான்..!

PREV
click me!

Recommended Stories

ஆஸி., கடற்கரையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்! 10 பேர் பரிதாப சாவு!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!