ஈரான் குறித்து பேசிய டிரம்ப் , ஈரான் மரணத்தையும் அழிவையும் பரப்பி வருகிறது , வலுவான பொருளாதார தடையினால் ஈரானை ஒடுக்கியுள்ளேன் , ஆனாலும் தலைக்கணம் மற்றும் முட்டாள்தனத்தின் காரணமாக தன்னிடம் உதவி கேட்க ஈரான் மறுக்கிறது என தெரிவித்தார் .
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ஏற்கனவே ட்ரம்ப் மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிபர் பதவி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணை செனட் சபையில் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் அவரது உரை நகலை சபாநாயகர் கிழித்தெறிந்துள்ளார். தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற யூனியன் கூட்டத்தில் மூன்றாவது முறையாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார் .
அதில் பேசிய அவர், ஈரானையும் , ஈராக்கையும் வசப்படுத்தி வைத்திருந்த ஐஎஸ் காட்டுமிராண்டிகளை தான் துடைத்தெறிந்து விட்டதாக பெருமிதம் தெரிவித்தார் அத்துடன் அமெரிக்காவில் தற்போது வறுமை ஒழிந்து குற்றங்கள் குறைந்து வேலைவாய்ப்பு திண்டாட்டம் ஒழிக்கப்பட்டுள்ளது என கூறினார் . இந்நிலையில் ஈரான் குறித்து பேசிய டிரம்ப் , ஈரான் மரணத்தையும் அழிவையும் பரப்பி வருகிறது , வலுவான பொருளாதார தடையினால் ஈரானை ஒடுக்கியுள்ளேன் , ஆனாலும் தலைக்கணம் மற்றும் முட்டாள்தனத்தின் காரணமாக தன்னிடம் உதவி கேட்க ஈரான் மறுக்கிறது என தெரிவித்தார் .
அத்துடன் அணு ஆயுதங்களையும் ஈரான் உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அவர் எச்சரித்தார் . அப்போது அவருக்குப் பின்னால் இருந்த பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நன்ஸி பெலோசி அதிபர் ட்ரம்பின் உரை நகலைக் கிழித்து எறிந்தார் . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது ,ஆனால் ட்ரம்ப் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை , ஏற்கனவே இருக்கும் நான்சிக்கும் ட்ரம்புக்கும் இடையே மோதல் இருந்து வரும் நிலையில் டிரம்புக்கு எதிராக அவர் கொண்டுவந்த பதவி நீக்க தீர்மானமும் தோல்வி அடையும் நிலையில் உள்ளதால் நான்சி இவ்வாறு நடந்து கொண்டதாக அமெரிக்க நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.