இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் ...!! பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேறியது...!!

By Ezhilarasan Babu  |  First Published Feb 5, 2020, 1:38 PM IST

அசைக்க முடியாத ஆதரவும்  அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது .  எனவே ஜம்மு-காஷ்மீர்  சிறப்பு அந்தஸ்து ரத்து, யூனியன் பிரதேசங்களாக பிரித்தது 


காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை திரும்பபெற வேண்டுமென இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது  . ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து  செய்ததுடன் அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் ,  லடாக் என இரண்டாகப் பிரித்து இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது இதனால் இந்த இரண்டு மாகாணங்களும்  மற்ற மாநிலங்களைப்போல ,  இந்திய அரசின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது . 

Latest Videos

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான் ,  தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளதுடன்,  சர்வதேச அரங்கிலும் இந்தியாவுக்கு எதிராக குற்றம்சாட்டியுள்ளது .  இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் பிப்ரவரி -5 அன்றை காஷ்மீர் ஒற்றுமை நாளாக அனுசரித்து வருகிறது .  இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று கூடியது .  இதில் காஷ்மீர் மக்களுக்கு தைரியமாகவும் ,  அசைக்க முடியாத ஆதரவும்  அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது .  எனவே ஜம்மு-காஷ்மீர்  சிறப்பு அந்தஸ்து ரத்து, யூனியன் பிரதேசங்களாக பிரித்தது 

மற்றும் ஜம்மு காஷ்மீரில் குவித்துள்ள  ராணுவத்தையும் இந்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்பதுடன் காஷ்மீர் மக்களுக்கு அரசியல் தார்மீகம், மற்றும்  தூதரக அளவில் பாகிஸ்தான் எப்போதும்  உதவிகள்  அளிக்கும்.   அதேபோல் காஷ்மீர் பிரச்சனையில் அமைதியான முறையில் தார்வுகாண ஐநா மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .  மற்றும் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை பார்வையிட சர்வதேச அமைப்புகள் பிறநாடுகளின் எம்.பியும் மற்றும் சர்வதேச  ஊடகங்களையும் இந்நியா அனுமதிக்க வேண்டும் .  காஷ்மீர் பிரச்சனை தொடர்பான சிறப்பு கூட்டத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் பிராந்தி அமைதிக்கும் நடுநிலை தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் பாஜக அரசின்போர் வெறிவிரோத போக்கு ஆகியவற்றை பாகிஸ்தான் முற்றிலுமாக நிராகரிக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.  

click me!