நாம் எண்ணிய வகையில் எல்லாம் நமது வாழ்க்கை நம்மை வழிநடத்திச் செல்வதில்லை, ஆனால் நடப்பது எதுவாக இருப்பினும், அதை உறுதியான நெஞ்சம் கொண்டு எதிர்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் பெரும் துயரங்களே மிஞ்சும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது இந்த இந்திய இளைஞனின் வாழ்க்கை.
இந்தியாவை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத வாலிபர் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர் வெளிநாடுகளிலும் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது (உறுதியான தகவல் கிடைக்கவில்லை) இந்த சூழலில் தான் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், நிச்சயம் ஆகும் முன்னரே அவருடைய கல்யாணம் முடிவுக்கு வந்தது.
இதனால் மணமுடைந்து போன அந்த இளைஞர், தாய் மற்றும் தகப்பனை விட்டுவிட்டு துபாய் சென்று தங்கி உள்ளார். திருமணம் நடக்காத நிலையில், அந்த சோகத்தோடு துபாய் சென்ற அந்த இளைஞர், பல ஆண்டுகளாக தங்கள் தாய் தந்தையரோடு தொடர்பில்லாமல் துபாயிலேயே வசித்து வந்துள்ளார்.
இரு முறை ஆஸ்கார் வென்ற மாபெரும் இயக்குனர் - "திகில் படங்களின் தந்தை" William Friedkin காலமானார்!
ஒரு கட்டத்தில் தனது தாய் தந்தையுடன் பேசுவதையும் அந்த நபர் நிறுத்தியது அவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செய்வதறியாது தவித்து வந்த அந்த இரு பெற்றோரும் ஒரு கட்டத்தில் துபாயில் தங்களுக்கு தெரிந்த சிலரை வைத்து நேரடியாக துபாய் சென்று தங்கள் மகனை மீண்டும் இந்தியா அழைத்துச் செல்ல ஆயத்தமாகி உள்ளனர்.
தங்களுக்கு கிடைத்த மிக குறைவான தகவல்களை வைத்து, துபாயில் பல வீடுகளுக்கு ஏறி இறங்கி அந்த வயதான தம்பதி, தங்கள் மகனை தொடர்ச்சியாக தேடி வந்துள்ளனர். அப்படி அவர்கள் தேடிக் கொண்டிருந்த வேளையில், ஒரு நாள் அவர்கள் தலையில் பேரடி விழுந்தது போல ஒரு சோகமான செய்தி அவர்களுக்கு கிடைத்தது.
அதுதான் ஏற்கனவே அவர்களுடைய மகன் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என்ற செய்தி. உடல்களை பாதுகாத்து வைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெற்றோர், தங்கள் மகனை அடையாளம் காட்டிய நிலையில், பெட்ரா மகனின் உடலை பார்த்து அந்த தாயும் தந்தையும் கதறி எழுந்த காட்சி அங்கு இருப்பவர்களை கண் கலங்க வைத்தது.
இறுதியில் துபாய் அரசின் உதவியோடு இறுதிச்சடங்குகளுக்காக அந்த தாய் தந்தையுடன் அந்த மகனின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டி.. மேலாடையின்றி நடத்தப்பட்ட உடல் சோதனை? போட்டியாளர்கள் புகார்!