மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டி.. மேலாடையின்றி நடத்தப்பட்ட உடல் சோதனை? போட்டியாளர்கள் புகார்!

Ansgar R |  
Published : Aug 08, 2023, 09:11 PM IST
மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டி.. மேலாடையின்றி நடத்தப்பட்ட உடல் சோதனை? போட்டியாளர்கள் புகார்!

சுருக்கம்

இந்த ஆண்டு இறுதியில் மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடாரில் நடைபெறும் வருடாந்திர மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கான, இந்தோனேசி நாட்டின் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக போட்டிகள், இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தோனேசியாவின் சார்பாக, மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க இருந்த 6 போட்டியாளர்கள், தாங்கள் மேலாடையின்றி "உடல் சோதனைக்கு" உட்படுத்தப்பட்டதாகக் கூறியும், நிகழ்ச்சி அமைப்பாளர்களால் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர் என்று அவர்களின் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

போட்டியாளர்களின் புகார் குறித்து உறுதிப்படுத்தியுள்ள போலீசார், உடனடியாக விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர். இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், கடந்த  ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெற்ற இந்தோனேசிய அழகிப்போட்டியின் 5 போட்டியாளர்கள், தாங்கள் ஆண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் இருந்த ஒரு அறையில், உடல் பரிசோதனைக்காக உள்ளாடைகளைக் கழற்றுமாறு அமைப்பாளர்கள் கூறியதாக தெரிவித்தனர்.

சிங்கப்பூர் வந்து இறங்கியதும் சொகுசு கார் வாங்கிய Pixie.. யாருனு தெரியுதா? காரின் விலை கேட்டால் தலைசுத்தும்!

பிறகு அந்த ஐந்து போட்டியாளர்களும் மேலாடையின்றி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளனர் என்று அவர்களின் வழக்கறிஞர் மெல்லிசா ஆங்க்ரேனி தெரிவித்தார். ஆனால் அத்தகைய சோதனைகள் தேவையில்லை என்று கூறி தற்போது ஆறு போட்டியாளர்கள் புகார் அளித்துள்ளனர், என்றும் அவர் கூறினார்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டியை நடத்தும் நிறுவனமான பி.டி கபெல்லா ஸ்வஸ்திகா கார்யா மற்றும் அந்த நிறுவனத்தின் நிறுவனர் பாப்பி கேபெல்லா ஆகியோரை ஊடகங்கள், அவர்களின் சமூக ஊடக கணக்குகள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றது, ஆனால் அவர்களிடம் இருந்து பதில் எதுவும் பெறப்படவில்லை. 

இந்நிலையில் ஜகார்த்தா காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ட்ருனோயுடோ விஸ்னு ஆண்டிகோ கூறுகையில், திங்களன்று போட்டியாளர்களிடமிருந்து புகார் பெறப்பட்டது என்றும், அது விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இரு முறை ஆஸ்கார் வென்ற மாபெரும் இயக்குனர் - "திகில் படங்களின் தந்தை" William Friedkin காலமானார்!

PREV
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!