சீனாவில் 18, 264 பேருக்கு சிகிச்சை சக்சஸ்...!! கொரோனா பாதித்தவர்கள் குணமான ஆச்சர்யம்...!!

By Ezhilarasan Babu  |  First Published Feb 21, 2020, 12:04 PM IST

இதன் மூலம் சீனாவில் இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்துள்ளது என சீன தேசிய சுகாதாரத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
 


சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்துள்ளது .  நேற்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர் ,  கடந்த 3 மாதமாக சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனாவின் கோரத்தாண்டவம்  சற்றும் குறைந்தபாடில்லை ,  சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் வுகான் நகரில்  கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியுள்ளது .  சீனாவின் மட்டுமல்லாது ஜப்பான் ,  சிங்கப்பூர் , ஹாங்காங் ,  அமெரிக்கா,  ஆஸ்திரேலியா என 20க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது

Latest Videos

இந்நிலையில் சீனாவில் நாளொன்றுக்கு குறைந்தது 100 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்து வருகின்றனர் ,  அதேபோல் வைரஸால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாற்  அதிகரித்துள்ளது,   இதுவரையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது .  இந்நிலையில் சீனாவில் மேலும் 118 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.  இதன் மூலம் சீனாவில் இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்துள்ளது என சீன தேசிய சுகாதாரத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆக மொத்தத்தில் சுமார் 75 ஆயிரத்து 475 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.  நேற்று ஒரே நாளில் புதிதாக சுமார் 889 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  சீனா முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நேற்று மட்டும் 18 ஆயிரத்து  264 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர் . கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து குறையத் தொடங்கி உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

 

 

click me!