இருந்த ஒரு நம்பிக்கையும் போச்சு.. மூடப்பட்டது ஆப்கான் விமான நிலையம்.. ஆபத்தில் இந்தியர்கள்.

By Ezhilarasan Babu  |  First Published Aug 16, 2021, 12:04 PM IST

இதனால் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி அவசரமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காபுலைவிட்டு வெளியேறினார். முழு ஆப்கனிஸ்தானும் தலிபான்கள் கட்டுக்குள் வந்ததால், அந்நாட்டு மக்கள்  அந்நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைய காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், அங்கு தவிக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தலிபான்கள் நாட்டை கைப்பற்றி உள்ளதால், அந்நாட்டில் இருந்து வெளியேற அந்நாட்டு மக்கள் காபுல் விமான நிலையத்தில் குவிந்து வருவதால், விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.  இந்நிலையில் இன்று பிற்பகல் இந்தியா விமானம் இந்தியர்களை மீட்க ஆப்கனிஸ்தான் செல்லவிருந்த நிலையில் காபுல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது காபுல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு நடத்தப்பட்ட துப்பாக்குச்சூட்டில் சிலர் உயிரிழந்த தாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

ஆப்கனிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக   இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான தலிபான்களுக்கும்- ஆப்கனிஸ்தான் அரசுப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நீடித்து வந்தது. ஆப்கனிஸ்தான் அரசுப்  படைக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்க படை, தலிபான்களை துவம்சம் செய்து விரட்டியது, ஆனால் பல்வேறு நெருக்கடி காரணமாக அமெரிக்க படைகள் தொடர்ந்து அங்கு நீடிக்க முடியவில்லை, எனவே அமெரிக்கா படைகளை திரும்ப பெற்றது. இதனால் தலிபான்கள் மீண்டும் தாக்குதலை தீவிர படுத்தினர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய நகரமான கந்தகார் உள்ளிட்டவை முழுவதுமாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 

இதனால் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி அவசரமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காபுலைவிட்டு வெளியேறினார். முழு ஆப்கனிஸ்தானும் தலிபான்கள் கட்டுக்குள் வந்ததால், அந்நாட்டு மக்கள்  அந்நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைய காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.இதனால் அங்கு கலவர சூழல் ஏற்பட்டுள்ளது. இதானல் காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. எனவே அங்கு தவிக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் இன்று பிற்பகல் 12:30 க்கு இந்திய விமானம் இந்தியர்களை மீட்க ஆப்கனிஸ்தான் செல்லவிருந்த நிலையில் காபுல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எற்பட்டுள்ளது.  காபுல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு நடத்தப்பட்ட துப்பாக்குச்சூட்டில் சிலர் உயிரிழந்த தாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

முன்னதாக இது குறித்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஒருவேளை அங்கு நிலைமை மோசமடையும் பட்சத்தில்  சி-17
குளோப் மாஸ்டர் விமானத்தையும் இந்தியா தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறினர். கடந்த சில நாட்களாக ஏராளமான ஆப்கனிஸ்தானியர்கள் இந்திய தூதரகத்தை  அனுகி ஆப்கனிஸ்தான் தலைநகரில் இருந்து வெளியேற இந்தியாவுக்கு விசா வழங்குமாறு கோரி வருகின்றனர். ஆனால் இதற்கிடையில் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.  அதேபோல், தூதரகத்தையோ அல்லது பிறநாட்டு மக்களையோ குறிவைத்து தாக்க மாட்டோம் என்றும், தங்களால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார். போர் முடிந்துள்ள நிலையில் அமைதியையை தாங்கள் விரும்புவதாகவும், சர்வதேச நாடுகள் தங்களுடன் இணைந்து செயல்பட முன்வரவேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!