வங்கதேசத்தில் நடிகர் சாண்டோ கான் மற்றும் அவரது தந்தையை அடித்துக் கொன்ற கும்பல்!

By SG Balan  |  First Published Aug 11, 2024, 6:55 PM IST

பகரபஜார் பகுதியில் ஒரு கும்பல் செலிம் மற்றும் சாண்டோ இருவரையும் பிடித்து அடித்துக் கொன்றதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.


வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது வங்கதேச நடிகர் சாண்டோ கான் மற்றும் அவரது தந்தையும் இயக்குனருமான செலிம் கான் இருவரும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

செலிம் மற்றும் சாண்டோ இருவரும் திங்கட்கிழமை பாலியா யூனியனில் உள்ள ஃபரக்காபாத் பஜாரில் இருந்து பாதுகாப்பான இடத்துக்குத் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் உள்ளூர்வாசிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இருவரும் மீண்டும் தப்பிக்க முயன்றுள்ளனர். பகரபஜார் பகுதியில் ஒரு கும்பல் அவர்களைப் பிடித்து அடித்துக் கொன்றதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

செலிம் கான் டோலிவுட் நட்சத்திரங்களை வைத்து பல படங்களை தயாரித்ததன் மூலம் அந்நாட்டில் பரவலாக அறியப்பட்டவர். ஷாஹேன்ஷா மற்றும் பித்ரோஹி போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

வங்கதேசத்தில் சித்துவேலை செய்த அமெரிக்கா! நடந்தது இதுதான்.. ஷேக் ஹசீனா ஓபன் டாக்!!

வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கையின் முக்கிய தருணங்களைப் பற்றி பேசும் துங்கி பரார் மியா பாய் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இந்தப் படம் அவரது மகன் சாந்தோ கானின் அறிமுகப் படமாக அமைந்தது. சாண்டோ கான் பின்னர் தனது தந்தையின் தயாரிப்பில் பல படங்களில் நடித்தார்.

2022இல் வெளியான பிக்கோவில் சாண்டோ கான், ஸ்ரபந்தி சாட்டர்ஜி, ரஜதவ தத்தா மற்றும் ஜாய்தீப் முகர்ஜி ஆகியோருடன் நடித்தார்.

செலிம் கானுடன் பணியாற்றிய நடிகர் தேவ், இந்தக் கொலை பற்றிக் கூறுகையில், "நான் திங்கட்கிழமை செலிம் பாயிடம் பேசினேன். சில மணிநேரங்களுக்குப் பிறகு, இயக்குனர் ஷமிம் அகமது ரோனி, அமெரிக்காவில் இருந்து எனக்கு போன் செய்தார், அவர் கூறிய வேதனையான செய்தியைக் கேட்டதும் என் கைகள் நடுங்கத் தொடங்கிவிட்டன. ​​நான் அப்படிதே உறைந்து போய்விட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

இரவையும் பகலையும் பிரிக்கும் மெல்லிய கோடு! நாசா வெளியிட்ட பூமியின் அபூர்வமான புகைப்படம்!!

click me!