அடே சாமி.. செய்தியாளர் என்னமா நடிக்கிறாருனு பாருங்க..!

By thenmozhi g  |  First Published Sep 16, 2018, 2:51 PM IST

புயலால் தான் அசைக்கப்படுவது போல நாடகமாடி உள்ளார் அமெரிக்க செய்தியாளர் ஒருவர். அமெரிக்காவின் கரோலினாவை பிளாரன்ஸ் புயல் தாக்கிய போது அங்கிருந்த செய்தியாளர் மைக் செய்டல் வானிலை நிலவரத்தை எடுத்துரைக்கிறார்.


புயலால் தான் அசைக்கப்படுவது போல நாடகமாடி உள்ளார் அமெரிக்க செய்தியாளர் ஒருவர். அமெரிக்காவின் கரோலினாவை பிளாரன்ஸ் புயல் தாக்கிய போது அங்கிருந்த செய்தியாளர் மைக் செய்டல் வானிலை நிலவரத்தை எடுத்துரைக்கிறார். அப்போது தான் புயலால் நிற்க கூட முடியாமல் மிகவும் கஷ்டப் பட்டு செய்து சொல்வது போல ஒரு பிம்பம் ஏற்படுத்துகிறார்.

அதாவது அதிக அளவில் காற்று வீசி, அவர உடல் முன்னும் பின்னும் அசையும் வகையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார் அப்போது, அவருக்கு பின்புறமாக இருவர் சாதரணமாக நடந்து செல்லும் காட்சியை பார்க்க முடிகிறது. இதன் மூலம் காற்றில் தன் உடல் அசைவது போல் செய்தியாளர் நாடகமாடியது தெரிய வநதுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் கண்டன குரல் எழுப்பபபட்டது.

I like the Weather Channel. But look at this guy acting like the wind is about to blow him over as he rocks back and forth. Meanwhile, I guess he missed the guys walking behind him casually talking on their phones. OOPS!!

I mean it's windy sure BUT........... pic.twitter.com/OPlio7VEWx

— 🇺🇸John #KAG🇺🇸🚂👊🐸 (@JohnCooper0610)

Latest Videos

 

பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த வானிலை தொலைக்காட்சி, அவர் வெறும் காலில் நின்று உள்ளதால் அதிக குளிர்ச்சி தாங்கமுடியாமல் அவ்வாறு உடல் அசைவை செய்து உள்ளார் என விளக்கம் அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

click me!