பன்னிரெண்டு பணிப்பெண்களை நியமித்தும், அவர்களுக்கு தலா 28.5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தும் தனது மகளை ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார் இந்திய கோடீஸ்வர தந்தை ஒருவர்.
பன்னிரெண்டு பணிப்பெண்களை நியமித்தும், அவர்களுக்கு தலா 28.5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தும் தனது மகளை ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார் இந்திய கோடீஸ்வர தந்தை ஒருவர்.
இந்திய கோடீஸ்வர தந்தை ஒருவர் தனது மகளை ஸ்காட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில்
சேர்த்துள்ளார்.
கல்லூரி செல்லும் மகளுக்கு உதவியாக 12 ஊழியர்களைத் தேடி வருகிறார். இதற்காக அவர் விளம்பரம்
ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த விளம்பரத்தில் கல்லூரியின் சூழ்நிலைகளை சமாளிக்க தனது மகளுக்கு உதவி செய்ய 12 ஊழியர்கள் தேவை
என்றும், வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்காக ஆண்டு சம்பளம் 30 பவுண்டுகள் என்றும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் கேட்டுக்
கொண்டுள்ளார். 30 பவுண்டுகள் என்பது இந்திய ரூபாயில் 28.5 லட்சம் மதிப்பு கொண்டதாகும். மேலும் அனுபவம்
வாய்ந்த ஊழியர்களை விரும்புகிறோம் என்றும் அதில் கூறியுள்ளார்.
ஒரு சமையல்காரர், ஒரு பெண் பணிப்பெண், ஒரு பணியாளர், ஒரு ஓட்டுநர், ஒரு தோட்டக்காரர், ஒரு வீட்டு மேலாளர்,
மூன்று வீட்டு காவலாளிகள் மற்றும் மூன்று காலாட்பணிகள் ஆகிய பதவிகளுக்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. தனது
மகளுக்காக, ஸ்காட்லாந்தில் ஒரு மாளிகையை வாங்கியுள்ளார்.