கற்பழிப்பு வழக்கில் இருந்து தப்பித்த நபர்! சுட்டு கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட நாய் உயிருடன் வந்ததால் பரபரப்பு

By sathish kFirst Published Sep 15, 2018, 5:36 PM IST
Highlights

அமெரிக்காவை சேர்ந்த ஜோசுவா ஹார்னர் எனும் நபர் , ஒரு குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் ஒரு நாயை கொன்றதும் கூடுதல் குற்றமாக பதிவாகி இருந்தது. 

அமெரிக்காவை சேர்ந்த ஜோசுவா ஹார்னர் எனும் நபர் , ஒரு குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் ஒரு நாயை கொன்றதும் கூடுதல் குற்றமாக பதிவாகி இருந்தது. 

இந்நிலையில் அவர் கொன்றதாக கூறப்பட்ட அந்த நாய் உயிருடன் வந்ததால் தற்போது இந்த வழக்கில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஜோசுவா ஹார்னர் ஒரு குழந்தையிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக ஒரு பெண் தான் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின் போது “ ஜோசுவா செய்த தவறை நான் வெளியில் கூறிவிடக்கூடாது என்பதற்காக  என் கண் எதிரிலேயே லேப் ரக நாய் ஒன்றை ஜோசுவா சுட்டு கொன்றார்”  என்றும் அந்த பெண் கூறி இருந்தார்.

இதனால் இந்த வழக்கில் ஜோசுவா கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இந்த வழக்கில் பல குழப்பங்கள் இருப்பதால் இந்த வழக்கினை குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறது ”ஆரிகன் இன்னசன்ஸ் புராஜக்ட்” எனும் அமைப்பு. இந்த ஆய்வின் போது ஜோசுவாவால் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட நாய் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த சம்பவம் கூறித்து ஆராய்ந்த இந்த அமைப்பு லூசி எனப்படும் அந்த நாயை கண்டுபிடித்து, அதன் அடையாள ஒற்றுமையை ஒப்பிட்டு ஜோசுவா மீதான குற்றத்தை பொய்யானது என கூறி இருக்கிறது. மேலும் அந்த பெண் இதில் கூறி இருக்கும் இந்த தகவல் பொய்யானதாக இருப்பதால் இந்த வழக்கின் உண்மை தன்மை மீது , நம்பிக்கை இல்லை என கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கின்றனர். வழக்கு தொடர்புடைய நாய் கண்டுபிடிக்கப்பட்டதால் வழக்கின் போக்கே திசை மாறி இந்த குற்றத்தில் இருந்து விடுதலையாகி இருக்கிறார் ஜோசுவா.

click me!